×
 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

செங்கல்பட்டு அருகே வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்ட திருக்கழுக்குன்றம் அதிமுக நிர்வாகி வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

செங்கல்பட்டு மாவட்டம் குன்றம் அதிமுக பேரூராட்சி செயலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர் தனது வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சில இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கிய காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கண்டித்திருந்தார். மேலும் அந்த கண்டன அறிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

 

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை இடத்திலே அனுமதி கேட்டிருந்தபோது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் வீட்டிற்கு அருகே குவிந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை தரதரவென இழுத்துச் சென்று, குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

இதையும் படிங்க: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 26 சீட்டுதான் கிடைக்கும்.. பொசுக்குன்னு சொன்ன பெங்களூரு புகழேந்தி.!

இந்நிலையிலே அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாகனத்தையும் போலீசார் கொச்சிமங்கலம் பகுதியிலே தடுத்து நிறுத்தினர். பின்னர் கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, அவருடைய வாகனம், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வாகனமானது வீட்டின் அருகே வந்த போது அங்கு அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்த ஜெயக்குமார்,  “ஏன் இந்த மாதிரி முன்னாடியே கைது செய்கிறீர்கள்?” என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். 

மேலும் இதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share