×
 

அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மரணம்..? சுகாதார அமைச்சர் அலட்சியம்..? வெளுத்து வாங்கும் அண்ணாமலை..!

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட ஷாகிரா என்ற பெண், டாக்டர்கள் இல்லாமல், முறையான சிகிச்சை கிடைக்காமல் இறந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் மரணம் அதிகரித்து வருகின்றன என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா தி.மு.க. அரசு? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லன்றது பச்சை பொய்.. கொந்தளித்த கீதா ஜீவன்..!

தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம். இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா திமுக அரசு? என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை சொல்லறதுக்கு எல்லாம் கவலைப்பட முடியுமா..? - அதிமுக நெத்தியடி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share