"A " சான்றிதழ் படம் பார்க்க அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் .."காரை காவலன்" செயலியில் பரந்த புகார் !
காரைக்காலில் A சான்றிதழ் பெற்ற விடுதலை-2 படத்தை பார்க்க சிறார்களை அனுமதித்ததாக திரையங்கு மீது ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் "A " சான்றிதழ் பெற்ற விடுதலை-2 படத்தை பார்க்க சிறார்களை அனுமதித்ததாக திரையங்கு மீது ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை காவலன் என்கிற தனி செயலியை காரைக்கால் காவல்துறை பயன்படுத்தி வருகிறது. காரைக்காலில் மிகவும் பிரபலமான இந்த செயலியில் பொதுமக்கள் தங்களது புகார்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் காரைக்கால் திருநள்ளாறு வெங்கடாசலபதி நகரை சேர்ந்த கருணாகரன் என்பவர் செயலி மூலம் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் விடுதலை இரண்டு பாகம் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள தனியார் திரையரங்கில் சிறார்களை படம் பார்க்க அனுமதித்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.
இதனை காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி அந்த திரையரங்கம் மீது நடவடிக்கை எடுப்பார்கள் தெரிகிறது.
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அழுத்தம்... இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் வங்கதேசம்... ஒப்பந்தம் அறியாத மக்கா இந்த ‘மாஸ்டர் மைண்ட்’..?
இதையும் படிங்க: ‘2000 டன் செம்மரம் விற்று முதல்வரையே மாத்தணும்...’ நீச்சல் குளத்தில் சூ சூ போன அல்லு அர்ஜூன்... புஷ்பாவுக்கு மீண்டும் சிக்கல்..!