×
 

கைதானவர் என் மகளின் ஆண் நண்பர் இல்லை..! ராகுலுடன் போஸ் கொடுத்த பெண்ணின் தாயார் பேட்டி..!

கைதானவர் எனது மகளின் நண்பர் அல்ல என ராகுலுடன் போஸ் கொடுத்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சூட்கேசில் உடலை வைத்து ரோட்டில் வீசிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் பெண் ராகுல் காந்தி நடை பயணத்தின் போது அவருடன் உற்சாகமாக நடை போட்டவர். 

"இந்த கொலை தொடர்பாக கைதான வாலிபருக்கும் தனது மகளுக்கும் எந்த நட்பும் இல்லை" என்று, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் கூறியிருக்கிறார். "கைதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதைக்க வேண்டும்; இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் "அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அரியானா மாநிலம் ரோதக் நகரின் சம்ப்லா பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெரிய சூட்கேஸ்சில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் மடித்து வைக்கப்பட்டிருந்தது.போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ஹிமானி நர்வால் என்றும், 23 வயதான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் என்றும் தெரியவந்தது. 

இதையும் படிங்க: காங்கிரஸ் இளம்பெண் வீட்டிற்குள்ளேயே கொலை... 'பாய் ஃப்ரண்ட்' நடத்திய பயங்கர சம்பவம்..!

இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது அவருடன் உற்சாகமாக பங்கேற்றவர். இந்த புகைப்படங்கள் வைரலானதும் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உடனடியாக மொபைல் போன் கடை நடத்தி வரும் சச்சின் என்ற வாலிபரை இந்த கொலை தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ஹிமானியின் செல்போனும் கைப்பற்றப்பட்டது. குற்றப்பிரிவு மற்றும் தடய அறிவியல் போலீசாரும் புலன் விசாரணை நடத்தி வந்தனர். ஹிமானியின் தாய் மற்றும்அ சகோதரர் ஆகியோர் டெல்லியில் வசிக்கிறார்கள்.

இவர் மட்டும் அரியானாவில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஹிமாலியின் தாய் சபிதா நரவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "எனது மகளின் கொலைக்கான முக்கிய காரணம் பற்றி போலீசார் விசாரித்து கண்டறிய வேண்டும். 

அதை என்னவென்று எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்படி வழங்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.

அதற்கு அறியானா மாநில அரசும், நிர்வாகமும் தான் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும்" என்று  தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது "தற்போது கைதாகி இருக்கும் சச்சின் எனது மகளின் நண்பர் என்று போலீசார் கூறிய தகவல்கள் உண்மையல்ல. குற்றவாளி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக புதிய புதிய காரணங்களை கூறத் தொடங்கி இருக்கிறார்.

எனது மகள் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதை ஆட்சியாளர்கள் எனக்கு தெரிவிக்க வேண்டும். பணம் இதற்கான காரணம் நிச்சயமாக கிடையாது. ஒருவன் எனது மகளைகொலை செய்திருக்கிறான் என்றால், அவன் எப்படி மகளுக்கு நண்பனாக இருக்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால் போலீஸ் தரப்பில் சச்சினும் கொலை செய்யப்பட்ட பெண்ணும் சமூக ஊடகம் வழியாக நட்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும்,  நட்பு ரீதியாக அவருடைய வீட்டுக்கு சச்சின் அடிக்கடி செல்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர். இதுபோன்று பெண்களை சிறுமிகளை கொலை செய்யும் ரவுடிகளை தூக்கில் போட வேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான மனிஷ் குரோவர் கூறியிருக்கிறார்.

'இதனை சமூகம் சகித்துக் கொள்ளாது. சட்டம் அவரை மன்னிக்காது; கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துக் கூறுவேன்' என்றும் அவர் கூறினார்.

கொலை நடந்தது எப்படி? 

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று சச்சின்ஹிர்மானி வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது அவர்களுக்கு இடையே ஏதோ ஒரு விஷயத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் மொபைல் சார்ஜர் கேபிள் உதவியுடன் அவரை சச்சின் கொன்றதாகவும், ரோத்தக் சரக போலீஸ் ஏடிஜிபி கிருஷ்ணகுமார் ராவ் கூறி இருந்தார். 

இதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின்தாயார் இந்த பேட்டியை கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஆளுநரே அரசியல் செய்ய அண்ணாமலை இருக்காரு.. அவரோடு ஏன் போட்டி.? கச்சத்தீவு கருத்துக்கு அமைச்சர் ரகுபதி ஆவேச பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share