×
 

ஈரோடு கிழக்கில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை...

ஈரோடு கிழக்கில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது.

கடந்த 5-ந் தேதி ஈரோடு கிழக்கில் நடைபெற்ற தேர்தலில் 67.97 வாக்குகள் பதிவாகின. அவை அனைத்தும் தொகுதிக்கு உட்பட்ட சித்தோடு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இன்று காலை கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் அகற்றப்பட்டது. பூத் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த 3 பெட்டிகளை எண்ணும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் கன்கரா தொடங்கி வைத்தார். 

மொத்தம் 14 மேசைகள் போடப்பட்டு 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 247 தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார். இதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணும் பணி தொடங்கப்படும். காலை 11 மணி வாக்கில் முன்னிலை நிலவரங்கள் தெரிந்து விடும். 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்...

முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்ட போது, தங்கள் கட்சியின் ஏஜெண்ட்டுகள் அழைக்கப்படவில்லை என்று நாம் தமிழர் கட்சி பிரதிநிதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய பிறகே தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 
வாக்கு எண்ணிக்கையையொட்டி துணை ராணுவப் படையினரும், ஈரோடு மாவட்ட போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share