×
 

டெல்லியில் 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு; பிரம்மாண்ட விழாவில் முதல்வர் ரேகா குப்தாவுடன் பதிவியேற்பு!

டெல்லியில் புதிதாக பதவி ஏற்கும் பாஜக முதல்வராக ரேகா குப்தா நேற்று தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருடன் பதவியேற்கும் ஆறு அமைச்சர்கள் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பில் முதல்வர் ரேகா குப்தாவின் ஆலோசனையின் படி, பாஜக எம்எல்ஏக்கள் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்த ராஜ், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோரை டெல்லி அரசின் அமைச்சர்களாக ஜனாதிபதி நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவில் சாதி மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்தும் உத்தியை முதல்வரின் நியமனம் பிரதிபலிக்கிறது. இவர் கெஜ்ரிவாலின் வைசிய ஜாதியை சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் டெல்லியில் பலமிக்க வர்த்தக சமூகத்தினராக உள்ளனர்

இதையும் படிங்க: முதலமைச்சர் பேச்சுக்கு கொந்தளித்த பா.ரஞ்சித்...! அப்படி என்ன தான் சொல்லிட்டாரு நம்ம முதல்வர்..!

இன்று பிற்பகல் டெல்லி ராமலிங்கம் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான விழாவில் முதல் அமைச்சர் ரேகா குப்தாவுடன் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பா்வேஷ் வா்மா துணை முதல்வராகவும் மற்றவர்கள் அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்களுக்கு இன்று துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால் மூன்று அலங்கார மேடைகள் அமைக்கப்பட்டு மிகப் பிரமாண்டமாக இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக நேற்று டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக முதல்வராக ரேகா குத்த ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வேட்பு மனுவை எம்.எல்.ஏக்கள் பரவேஸ் வர்மா சதீஷ் உபாத்தியாய் மற்றும் விஜேந்திர குப்தா ஆகியோர் முன்மொழிந்து இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த பதவிக்கு போட்டியாளர்களாக கருதப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் ரேகா குப்தா கவர்னர் வி.கே சக்சேனாவை சந்தித்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரினார்.

இது குறித்து கவர்னரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் "டெல்லி சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற கட்சியின் தலைவர் கவர்னர் மாளிகையில் கவர்னர் சக்சேனாவை சந்தித்து டெல்லியில் புதிய அரசு அமைக்க தனது உரிமையை வலியுறுத்தினார் என்பதை உறுதிப் படுத்தியது.

கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்ததாக கவர்னர் மாளிகையின் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்று பதவி ஏற்பு விழாவைத் தொடர்ந்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் 25,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவர் பதவி FOR SALE..! அக்ரீமெண்ட் போட்டு விற்ற தில்லாலங்கடி பெண் தலைவி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share