×
 

கள்ளத்தனமாக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் சோகக்கதை..! தலா ரூ.42 லட்சத்தை இழந்த அவலம்..

கள்ளத்தனமாக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் சோகக்கதை.. ரூ.42 லட்சத்தை இழந்த அவலம்..

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்களை அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பெயரில் அந்நாட்டு அரசு 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் நேற்று நாடு கடத்தியது, அவர்களும் அமிர்தசரஸ் நகர் வந்து சேர்ந்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த இந்தியர்களை மனிதேயமற்று கை, கால்களில் விலங்கு பூட்டி அமெரிக்க அரசு இந்தியாவுக்குநாடு கடத்தியுள்ளது. விமானப் பயணம் முழுவதும் விலங்குடன் பயணம் செய்து அமிர்தசரஸ் வந்து இறங்கியதும்தான் விலங்குகள் கழற்றிவிடப்பட்டன என்று இந்தியர்கள் புகார் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டம், ஹர்தோவால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்பால் சிங்(36). அமெரிக்காவில் இருந்து அமிர்தரசஸுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இவரும் ஒருவர். கடந்த மாதம் 24ம் தேதி அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு ரோந்து படையினரால் பிடிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.


அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த 104 இந்தியர்களில் 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 3 பேர், சண்டிகாரைச் சேர்ந்தவர் 2 பேர் எனத் தகவல்கள் தெரிவித்தன.
அமிர்தசரஸ் விமானநிலையத்தில் இறங்கிய இந்தியர்களை போலீஸ் வாகனங்கள் மூலம் அவர்களின் சொந்த கிராமங்களில் கொண்டு சென்றுவிடப்பட்டனர். 
இந்த பயணம் குறித்து ஜஸ்பால் சிங் கூறுகையில் “ என்னை சட்டப்பூர்வமான வழியில் அமெரிக்காவுக்கு அனுப்புவதாகக் கூறித்தான் டிராவல் ஏஜென்ட் அனுப்பினார் ரூ.30 லட்சம் வாங்கினார். ஆனால், என்னை ஏமாற்றிவிட்டார். கடந்த ஜூலை மாதம் பிரேசில் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் சென்றேன்.  வேறுவழியின்றி அமெரிக்க எல்லையைக் கடக்க வேண்டியதாகிற்று. பிரேசிலில் 6 மாதம் தங்கியிருந்து அமெரி்க்க எல்லையைக் கடக்க முயன்றபோது அமெரிக்க போலீஸார் என்னைக் கைது செய்தனர். என்னை 11 சிறையில் வைத்திருந்தபின், இந்தியாவுக்கு அனுப்பினார்கள், என்னை நாடு கடத்துவது குறித்து எனக்கு ஏதும் தெரியாது.


வேறு ஏதோ பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றுநான் நினைத்தேன். விமானத்தில் ஏறியபின்புதான் போலீஸார் தெரிவித்தனர். என் கால்களையும், கைகளிலும் செயினால் விலங்கால் கட்டி அழைத்துச் சென்றனர்.
அமெரிக்கா செல்ல அதிகமாக கடன் வாங்கினேன், செலவிட்டேன். ஆனால் மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.
தஹ்லி கிராமத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் கூறுகையில் “ நான் அமெரிக்காவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டேன், கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, நிகரகுவா, அதன்பின் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குவந்தேன். ஆனால், மலைப்பகுதியில் செல்லும்போது பலரும் என்னுடன் வந்தனர். அதில் ஒருவர் வனப்பகுதியிலேயே உயிரிழந்துவிட்டார். . அமெரிக்காவுக்கு செல்ல நான் ரூ.42 லட்சம் செலவிட்டேன். ஆனால் கழுதை சுமைதூக்கி செல்லும் பாதை வழியாகத்தான் அமெரிக்காவுக்குள் அழைத்துச் சென்றனர். அமெரிக்கா செல்லும் வழியில் என்னிடம் இருந்த பணம், ஆடைகள் திருடப்பட்டன. முதலில் என்னை இத்தாலிக்கும் பின்னர் லத்தின் அமெரிக்காவுக்கும் கொண்டு சென்றனர். ஏறக்குறைய 17 முதல் 18 மலைகளைக் கடந்திருப்போம், உயிர்பிழைக்க வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. ஏராளமான உடல்களை வழியெங்கும் பார்த்தோம், யாரேனும் காயமடைந்தால் அவர்களை அங்கேயே விட்டுவிடுவோம், பல சடலங்களை வழியெங்கும் பார்க்க முடிந்தது” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: அம்ரித்சர் வந்த நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. அமெரிக்க ராணுவ விமானத்தில் பயணம்

இதையும் படிங்க: காதலர் தினத்திற்கு காத்திருக்கும் கங்கனா.. வாழ்த்து மழையை பொழியும் ரசிகர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share