×
 

டெல்லி தேர்தலில் தில்லுமுல்லு: அதிகாரிகள், பாஜகவிடம் சரண் அடைந்து விட்டனர்; கெஜ்ரிவால் சரமாரி குற்றச்சாட்டு..

டெல்லி சட்டசபை தேர்தலில் ஏராளமான தில்லு முல்லுகள் நடைபெறுவதாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பாஜகவிடம் சரணடைந்து விட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருக்கிறார்.

"டெல்லி தேர்தலை நடத்தும் அதிகாரி பாஜகவிடம் சரண் அடைந்து விட்டார். பாஜகவின் அனைத்து முறைகேடுகளுக்கும் தேர்தல் அதிகாரி ஆதரவு கொடுக்கிறார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாது என்றும் மீறி நடைபெற்றால் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எங்களிடம் உறுதி அளித்து இருக்கிறார்.


வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக ஏராளமான பொய்யான விண்ணப்பங்களும் பாஜகவினர் கொடுத்துள்ளனர். நான் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 22 நாட்களில் 5500 விண்ணப்பங்கள் இது போல் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவை அனைத்தும் போலி விண்ணப்பங்கள். இதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் அதில் இடம்பெற்று உள்ளவர்கள் தாங்கள் அதுபோன்று எந்த விண்ணப்பங்களும் கொடுக்கவில்லை என்று உறுதியாக சொல்லுகிறார்கள். 

இதையும் படிங்க: காங்கிரஸ்( இந்தியா) கூட்டணிக்கு சாவு மணி..! கலைத்து விடலாம் என உமர் அப்துல்லா அதிர்ச்சி..

டெல்லியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாஜக தலைமையிலான மத்திய அரசும், அமித் ஷாவும் டெல்லியை குற்ற தலைநகரமாக மாற்றி வருகிறார்கள். பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் டெல்லி மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. 

தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் புதிய ஆட்சியை அமைத்தால் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தங்கள் பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக காவலர்களை நியமித்துக் கொள்ள நிதி உதவி வழங்குவோம்". இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார். 

முன்னதாக அவருடைய சமூக வலைதள பதிவுகளில் பாஜக சார்பில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: "எனக்கு தோல்வி பயம் இல்லை : புது டெல்லியில் மட்டுமே போட்டி" ; பாஜகவுக்கு கெஜ்ரிவால் பதிலடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share