இதோட நிறுத்திக்கோங்க இல்லைன்னா... பாஜகவை பகிரங்கமாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!
மாணவர்களை கட்டாயப்படுத்தி மும்மொழிக் கொள்கை ஆதரவாக கையொப்பம் பெறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.
மாணவர்களை கட்டாயப்படுத்தி மும்மொழிக் கொள்கை ஆதரவாக கையொப்பம் பெறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.
அதிமுக மீது சாடல்:
திருவள்ளூர் 4வது புத்தகக் காட்சி திறந்து வைத்த பின் செய்தியாளர்கள் சந்தித்த அவர், கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் போட்டு இருப்பதால் அவர்கள் கூட்டணி நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்துள்ளார் என்றார்.
இதையும் படிங்க: 'அறிவாலயத்திற்கு அந்த லூசு வந்துடும்… பணம் கேட்டு துரத்தி அடி..' உதயநிதிக்கு அலெர்ட் கொடுத்த அன்பில் மகேஷ்..!
திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன் விவரம் விரைவில் தெரியவரும். ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது என்றார்.
பாஜகவிற்கு எச்சரிக்கை:
தொடர்ந்து பேசிய அவர் இருமொழிக் கொள்கையை போதுமானது அறிவியல் சார்ந்த விஞ்ஞானத்தை பற்றி பேச வேண்டிய காலம். உலகத்தரத்தில் குழந்தைகளை எப்படி அடுத்த கட்டத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டிய காலம். இது பாஜகவினர் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளை கைய பிடித்து இழுத்து மும்மொழிக் கொள்கையிலே கையொப்பம் பெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாணவர்களாய் விருப்பப்பட்டு கையொப்பம் போட்டால் போடுவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் விருப்பமில்லாமல் பள்ளிக்கு போகக்கூடிய மாணவர்களை பிடித்து கையொப்பம் போடுவது, அவர்களை மிரட்டுவது கூடாது. கல்விக்கான நிதியை கொடுக்காமல் பாரதிய ஜனதா பார்ட்டி பிளாக்மெயில் ஜனதா பார்ட்டியாக இருக்கிறது. மாணவர்களை கட்டாயப்படுத்தி பிஸ்கட் கொடுத்து மும்மொழி கையொப்பம் பெரும் பாஜக மீது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் அளிப்பதாக சொல்லியுள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பாஜகவை எச்சரிக்க காரணம் என்ன?
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தரும் படி பாஜகவினர் வீடு, வீடாகச் சென்று கையெழுத்து பெற்று வருகின்றனர். சென்னை காரப்பாக்கத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாஜகவை பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்பில் மகேஷ் அமைச்சராக தொடரக்கூடாது... அண்ணாமலை அதிரடி...!