நாளைக்கு இதுமட்டும் நடந்தால்... பாஜக என்ன செய்யும் தெரியுமா?...பகீர் கிளப்பும் கனிமொழி...!
மாநில உரிமைகளுக்காக முதல்வர் வழியில் நின்று போராடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி அறிமுக கூட்டத்தில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைகளுக்காக முதல்வர் வழியில் நின்று போராடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி அறிமுக கூட்டத்தில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதல்வர் தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் போராட வேண்டும். இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மத்தியில் இருக்கக்கூடிய பாஜக நம் மீது மூன்று மொழிகளை திணிக்கக்கூடிய முயற்சியை செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் கையொப்பமிட்டால் தான் நிதி கிடைக்கும் என்கிறது. பிற மாநிலங்கள் எல்லாம் கையெழுத்து விட்டு விட்டது. தமிழகம் மட்டும் தனித்து நிற்கிறது. தமிழ்நாடு எப்போதுமே தனித்திருக்க கூடிய ஒரு மாநிலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: அடிதூள்... அதிமுக சார்பில் ஜெயக்குமார் கொடுத்த ஐடியா... மெர்சலான முதல்வர்...!
தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்து கொண்டிருக்கும் அரசு தமிழக அரசு. மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் 1971க்கு பிறகு மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படவில்லை. இப்போது கணக்கெடுப்பு நடத்தினினால் தமிழகத்திலும் கேரளத்திலும் மக்கள் தொகையை நாம் குறைத்துள்ளோம். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டதால் பெண்களின் கல்வி உயர்ந்திருக்கிறது. மருத்துவ வசதி உயர்ந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு குறைக்கவில்லை. அங்கு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி குறைத்தால் தமிழகத்திற்கு தொகுதி குறைந்து விடும்.
பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகமான தொகுதிகள் கிடைக்கும். இன்று நாடாளுமன்றத்தில் 39 பேர் போய் போராடும் போதே மத்திய அரசு நமது கருத்துக்கு செவி சாய்க்க மறுக்கிறது. நாளை தென்னிந்தியாவில் எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டால் இங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட அவர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போதே தமிழகத்திற்கு நீதி கொடுப்பதில்லை என அவர் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: “இந்த விஷயத்துல மாற்று கருத்து இருக்கக்கூடாது”... அனைத்து கட்சி கூட்டத்தில் கட் அண்ட் கறாராக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்....!