×
 

திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம்.. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என முழக்கம்..!

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயமான, நடுநிலையான தொகுதிமறு சீரமைப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #fairdelimitation என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற அதிரடியாக விஷயங்களை கையில் எடுத்து மாநிலங்களை மிரட்டி வந்த மத்திய அரசு தற்போது விரைவில் தொடவுள்ள மற்றுமொரு முக்கிய விவகாரம் தொகுதி மறுசீரமைப்பு..

தற்போது நாடாளுமன்றத்தில் 543 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 1971-ம் வருடத்திய மக்கள்தொகை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் ஒப்புதல் தந்தார். ஆனால் 2002-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டத்திருத்தத்தின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971-ம் வருடத்திய கணக்கின்படியே தொகுதிகள் நீடிக்கும் என்று உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: திமுக நிர்வாகி காரில் கடத்தி கொலை.. நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டதால் விபரீதம்.. கள்ளக்காதலிக்காக கொலை செய்தது அம்பலம்..!

அதன்படி 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றாக வேண்டும். ஆனால் கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் மக்கள்தொகை அதிகம் உள்ள வடஇந்திய மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகளும், மக்கள்தொகையை சிறப்புற கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைவான தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விவகாரத்தை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பி வருகின்றனர். ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ள போதிலும், அதனை ஏற்க திமுகவினர் மறுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் எம்.பி.க்கள் நீதிவேண்டும் என்றும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்றும் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது #fairdelimitation என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

இதையும் படிங்க: இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில்தான் கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ள எம்.எல்.ஏ.க்கள்... ஆய்வில் திடுக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share