×
 

'திமுகவில் ஒரு தலைவனுக்காவது இதைப் பேச தகுதி இருக்கான்னு சொல்லுடா..?-- சீமான் ஆத்திரம்..!

என்ன பாலியல் குற்றம்? நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ... சும்மா சேட்டை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. முகம் சுழிச்சா சுழிச்சுட்டு இரு..

திமுகவில் இருக்கிற ஒரு தலைவனுக்கும்  என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்துப் பேச தகுதியில்லை என சீமான் ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ''மக்களால் நேசிக்கப்படுகிற ஒரு அரசியல் கட்சித் தலைவரை நீங்கள் இப்படி எல்லாம் நடத்தலாமா? அப்படியே நான் ஒரு பெண்ணை தூக்கிட்டுப் போய் கதறக் கதற வன்புணர்வு செஞ்சிவிட்ட மாதிரி நீங்க செய்து கொண்டிருக்கீங்க.. ஒரு நடிகை இவ்வளவு காலம் இருந்துவிட்டு தெருத்தெருவாக என்னை அசிங்கப்படுத்தும் போது எல்லோரும் அதை ரசித்துக் கொண்டே இருந்தீங்க.. அவரிடம் ஒரு முறைகூட என்னதான் உங்க பிரச்சனை என கேள்வியே கேட்கவில்லையே?

 

திருமணமாகிவிட்டது.. குழந்தையாகிவிட்டது.. இவ்வளவு பெரிய மக்கள் முன்னாடி தினம் பேசிக் கொண்டிருக்கிற இந்த மகனை, மக்கள் பிரச்சனைக்கு தினம் நிற்கிற மகனை இப்படி கேவலப்படுத்துகிறீர்களே? என ஏன் யாரும் கேட்கவில்லை? நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க. 15 வருஷமாகிடுச்சு. எனக்கு கல்யாணம் ஆகியே 14 வருஷமாச்சு. இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை? 

இதையும் படிங்க: வக்கிரவாதி சீமானுக்கு இனியும் வக்காலத்து வாங்குவீங்களா?... நாதக பெண் நிர்வாகிகளை உசுப்பேற்றும் சுதா எம்.பி...!

நான் பேசுறது மட்டும் முகம் சுழிக்க வைக்கிறதா? 15 வருஷமாக என்னை பழிபோட்டு அவமானப்படுத்துறீங்க? என்னை. என் குடும்பத்தை, என் பிள்ளைகளை குதறி தின்றீங்களே எல்லோரும். என் மகன் பெரியவனுக்கு நல்லா விவரம் தெரிந்துவிட்டது. அதை எல்லாம் அவன் பார்த்தா, அவன் நண்பர்கள் பார்த்தா என்னாவாங்க? அப்போ எல்லாம் உங்களால் முகம் சுழிக்க முடியலை? திமுகவில் யாருக்காவது தகுதி இருக்கிறதா? கேவலப்படுகிறவன், அவமானப்படுகிறவன் சீமானும் அவன் பிள்ளைகளும்தான்.

 

அதெல்லாம் உங்களுக்கு அவமானமாக, கேவலமாக இல்லையே? முகம் சுழிக்கிற முகத்தை ஒரு முறை காட்டு பார்ப்போம். எப்படி இருக்குதுன்னு பார்ப்போம். என்னை சொல்லும் போது சிரிக்கிறதே அந்த முகம்... ஆனால் என் ஆதங்கத்தை சொல்லும்போது அந்த முகம் சுழிக்குதே ஏன்? இந்த திமுகவில் இருக்கிற ஒரு தலைவன் இதை பற்றி பேச தகுதியோட இருக்கான்னு சொல்லுடா? ஒருத்தன்.. ஒருத்தனுக்கு தகுதி இருக்கிறதா? பாலியல் குற்றவழக்கு... பாலியல் குற்றவழக்கு... என்ன பாலியல் குற்றம்? நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ... சும்மா சேட்டை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. முகம் சுழிச்சா சுழிச்சுட்டு இரு...'' என ஆவேசமாக பேசினார் சீமான்.

இதையும் படிங்க: விஜய் மீது குறையாத பாசம்… ஆனாலும் முட்டிக்கொண்டது எப்படி? உருகி உருகி விளக்கிய சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share