சிறுவனின் அடிப்பட்ட கன்னம்.. தையலுக்கு பதில் பெவிகால்..! இது கர்நாடக கொடூரம்
சிறுவனின் அடிப்பட்ட கன்னத்தில் தையலுக்கு பதில் பெவிகால்
விளையாடும்போது கன்னத்தில் அடிபட்ட சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்ட செவிலியரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவெரி மாவட்டம் அனகல் தாலுகாவில் அடூர் என்ற கிராமம் உள்ளது
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம். அதில் ஜோதி என்ற செவிலியர் மட்டும் பணியிலிருந்து உள்ளார்.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது கன்னத்தில் அடிபட்டு காயத்தோடு குரு கிஷன் என்னும் 7 வயது சிறுவன் ஒருவன் அடூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளான். டாக்டர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர் ஜோதி நீண்ட காயம் பட்ட சிறுவனின் கன்னத்தில் தையல் போடுவதற்கு பதிலாக Fevikwik பசையை போட்டு ஒட்டி உள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுவன் காயம் ஆறாமல் மேலும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளான். இதுகுறித்து முறைகேடாக செயல்பட்ட அந்த செவிலியரிடமே சென்று பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்த செவிலியரோ அசட்டையாக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றம் நிர்ணயத்தபடி, காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
அதாவது காயம் சிறியது என்பதால் தையல் போட்டால் தழும்பு ஏற்படும் என்றும் , அதனாலேயே பெவிக் குயிக் பயன்படுத்தியதாகவும் பல ஆண்டுகளாகவே தாம் பெவி குயிக் பயன்படுத்தியே சிகிச்சை அளித்து வந்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதை எடுத்து சிறுவன் குருகிஷன் பெற்றோர்கள் செவிலியர் பேசியதை வீடியோவாக எடுத்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இந்த செய்தி பரவிய உடன் தவறான சிகிச்சை மேற்கொண்ட செவிலியர் ஜோதி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் செவிலியர் ஒருவரின் தரமற்ற செயலால் ஹவேரி மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு: தமிழக அரசுக்கு தடை இல்லை; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு