மக்கள் பிரச்சனையை கையிலெடுங்க..! கட்சியை சரி செய்யுங்க.. விஜய்யிடம் சொன்ன பிகே.. என்ன நடந்தது பேச்சு வார்த்தையில்?
விஜய்யுடனான சந்திப்பில் பிரஷாந்த் கிஷோர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் முக்கியமானது கட்சியின் கட்டமைப்பு, கூட்டணி குறித்து எல்லாம் பேசியுள்ளார்.
தவெகவுடன் ஆதவ் அர்ஜுன் இணைந்த உடன் அவர் சுதந்திரமாக இயங்குவதற்கு பல்வேறு தடைகள் இருந்தது. கட்சிக்குள் புது நபர்களுக்கு அனுமதி இல்லை. புஸ்ஸி ஆனந்தை பகைத்தால் பதவி இல்லை. கட்சிக்குள் புதிய சிந்தனை எதுவும் இல்லை. அரசுக்கு எதிராக ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவைகளை கண்டுக்கொள்வதே இல்லை என்கிற நிலையில் ஆதவ் அர்ஜுனாலும் இவர்களை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை என்ன செய்ய போகிறார் ஆதவ்? என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆதவ் அர்ஜுனா சில ஆலோசனைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில்தான் திடீரென பிரஷாந்த் கிஷோர் சென்னை வர அவரை அழைத்துக்கொண்டு விஜய்யை சந்தித்தார் ஆதவ் அர்ஜுனா. இந்த சந்திப்பு குறித்து பல்வேறு யூக தகவல்கள் பரப்பப்பட்டது. அதில் முக்கியமானது பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் (அப்படி ஒன்று இல்லவே இல்லை) விஜய்க்காக வேலை செய்யப்போகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் பிரஷாந்த் கிஷோர் ஐபேக்கை விட்டு விலகி பின்னர் ராபின் ஷர்மாவின் ஷோ டைம்-ல் இணைந்து பின் அங்குமில்லாமல் விலகி பிஹாரில் கட்சி ஆரம்பித்து செட்டில் ஆகிவிட்டார். அவர் ஆதவ் கேட்டுக்கொண்டதன் பேரில் விஜயை சந்திக்க சென்னை வந்தார் அவருடைய வருகையின் நோக்கம் தவெக என்று உள்ள தேக்கத்தை உடைத்து அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராக வேண்டும்.
இதையும் படிங்க: விஜய் கைக்குப் போன முக்கிய ரிப்போர்ட்... தவெகவை ஃபுல் மோடுக்கு ஸ்பீடு ஏத்திய பிரசாந்த் கிஷோர்...!
அதற்கு சரியான முடிவு எடுக்கக் கூடிய நபர் விஜய் மட்டுமே. அதுவே விஜய்யிடம் தவெக நிலையை விளக்கி சொல்லவும், அடுத்த கட்ட நகர்வுகள், உள்ளே உள்ள பிரச்சனை குறித்து பேசுவதற்கு அவர் விஜய்யுடன் சந்திக்க ஒப்புக் கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. காரணம் விஜய் அரசியலை பொருத்தவரை தான் ஏதாவது முன்னெடுப்பு எடுத்தால் தப்பாகிவிடுமோ என்று ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்தை முடிவெடுக்கச் சொல்லி ஒதுங்கி விடுகிறார். அவர்கள் எந்தவித முன்னெடுப்பும் எடுக்காமல் ஓராண்டு கட்சியை தள்ளிவிட்டார்கள். ஏதாவது விஜய் கேட்டால் எல்லாம் சிறப்பாக போகிறது என்று சொல்லி சமாளித்துவிடுகின்றனர்.
இதனால் கட்சியின் தேக்கம் என்ன நிலையில் கட்சி உள்ளது, அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பதுபற்றி விஜய்யிடம் எடுத்துச் சொல்ல ஆள் இல்லை என்கிற பிரச்சனை உள்ளது. ஆதவ் அர்ஜுனா திமுக போன்ற பெரிய கட்சிகளில் இயங்கியவர். அவருக்கு இந்த செயல்பாடு விநோதமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒரு அனுபவமும் இல்லாத இரண்டுபேர் கட்சிக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டோம், எந்தவித செயல்பாட்டுக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என இயங்குவதால் ஓராண்டாக கட்சி இருக்கும் நிலையை மாற்ற இறங்கினால் அதற்கும் முட்டுக்கட்டை என்பதால் என்ன செய்வது என்று யோசித்துத்தான் பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களை அழைத்து வந்திருக்கலாம் என்கின்றனர்.
அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு. விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் என்ன பேசினார் என்ற தகவல் குறித்து விசாரித்தபோது சில விஷயங்கள் கசிந்துள்ளது. ஆதவ் அர்ஜுனா அழைத்தபோது தவெக குறித்தும் அதன் ஓராண்டு செயல்பாடு குறித்தும் கேட்டறிந்த பிரஷாந்த் கிஷோர் அதிர்ந்து போய்விட்டாராம். எதுவுமே நகரவில்லை எப்படி பொதுதேர்தலை சந்திக்கப்போகிறீர்கள் என்று கேட்டதாக தகவல். பின்னர் பல விவரங்களை கேட்டுக்கொண்ட அவரதன் பின்னரே விஜய்யை சந்தித்துள்ளார். விஜய்யை பிகே சந்திப்பது பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்துள்ளது.
அதில் முதல் கட்டமாக பிரசாந்த் கிஷோர் விஜய்யிடம் கூறியது கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்துங்கள், இப்போது போடப்பட்டுள்ள நிர்வாகிகள் தேர்தல் அரசியலுக்கான தகுதியானவர்கள் இல்லை, ஒன்று அவர்களை தயார்படுத்துங்கள் அல்லது தகுதியானவர்களை நியமியுங்கள், கட்சியை பலமாக கட்டுவதற்காக சரியான நடவடிக்கைகளை எடுங்க என்று கூறியுள்ளார்.
கட்சியை பலப்படுத்த மாற்றுக் கட்சியில் இருந்து கட்சிக்கு வருபவர்களை ஆதரித்து அதிகமாக வரவேற்று கட்சிக்குள் இணைக்கும் வேலையை தொடங்குங்கள், கட்சியை நீங்கள் 2023 ல் ஆரம்பித்தது சரியல்ல, தேர்தலுக்கு நெருக்கத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும், முன்னரே ஆரம்பித்ததால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது கட்சிக்கு லேசான தொய்வு ஏற்படுத்தியது. நீங்கள் 2024க்கு பிறகு கட்சி ஆரம்பித்திருக்கலாம் அல்லது அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு 20204 பிறகு முழுமையாக கட்சியை தொடங்கி இருக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் உள்ள தேக்கத்தை உடைப்பதற்கு நிர்வாகிகளை மக்களை சந்திக்க வைப்பது, மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும். தனித்துப் போட்டி என்பது கட்சி இருக்கும் நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, வியூகத்தை சரியாக வகுக்க வேண்டும் என்றால் கூட்டணிக்குள் செல்வதே சிறந்தது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அவர் கூறியதை விஜய் அமைதியாக தலையசைத்து கேட்டுக் கொண்டாராம். இந்த சந்திப்பின் பொழுது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார் அதன் பின்னர் மேலும் சில ஆலோசனைகளை பிரஷாந்த் கிஷோர் விஜய்க்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதில் முக்கியமானது டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்காக சில ஏற்பாடுகளை செய்தனர், அதில் முக்கியமானது தனியார் பள்ளிகளை கையில் எடுத்தது அதில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் கல்வியில் ஒரு மாற்றத்தை கொண்டு வர மாணவர்களுடைய நலனுக்கு சரியான கட்சி பாஜக தான் என்கின்ற ஒரு பிரச்சாரத்தை பெற்றோர்களிடையே கொண்டு சென்றனர். அது போன்று ஒரு வேலையும் தொடங்க வேண்டும். அதேபோன்று ஆளுங்கட்சிக்கு எதிராக பரவலாக திரட்டப்பட்ட தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளை நீங்கள் நேரடியாக அழைத்துப் பேசி அவர்கள் குறைகளை கேட்டு, நான் ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் இது பெரிய அளவில் மக்களிடையேவும், அந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களையும் உங்களுடைய கட்சியை கொண்டு செல்லும் என்றும் கூறினாராம்.
முதற்கட்டமாக அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ, மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளை கேளுங்கள். சிறிய அளவில் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து பிரதான விஷயமாக வைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறியுங்கள் என்றெல்லாம் தெரிவித்துள்ளார். இதில் ஏற்கனவே ஆதவ் சில தொழிற்சங்கங்கள், ஆசிரியர் அமைப்புகள், கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கையை விஜய்யை அழைத்து பேசி கோரிக்கையை வலுவாக்க வேண்டும் என நினைத்து பேசியிருந்தாராம். அதையே பிகேவும் விஜய்யிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று பெண்கள், சிறுபான்மையினரை கவர கட்சி அதிக அளவில் முயற்சி எடுக்க வேண்டும் என்ற ஆலோசனையும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அவ்வப்பொழுது வருகின்ற சூழ்நிலை பொருத்து தன்னிடம் தயக்கம் இன்றி ஆலோசனை கேட்கலாம், தான் தகுந்த ஆலோசனை வழங்குவேன் என்று தெரிவித்து, ஆதவ் அர்ஜுனை சரியாக பயன்படுத்துங்கள் என்றும் கூறி சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் அடுத்தடுத்து ஆலோசனை கூறி சென்றுள்ளார். பிரஷாந்த் கிஷோர் மூலம் ஆதவ் அழகாக காய் நகர்த்தியுள்ளார். இது அந்த இருவருக்கு பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜயின் விறுவிறு வியூகம்… பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு… ஆடிப்போன திமுக- அதிமுக..!