கே.டி.ராகவன் விவகாரமும் இதுவும் ஒன்றா? ஜோதிமணி கவனமாக பேசணும்… குஷ்பூ ஆவேசம்...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டால் கேடி.ராகவன் விவகாரத்தை கையில் எடுத்து பேசுவதா? அதுவும் இதுவும் ஒன்றா? ஜோதிமணி எம்.பி போல பேசணும் என குஷ்பு ஆவேசப்பட்டார்.
அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் களத்தில் குதிக்க சமாளிக்க முடியாமல் திணறுகிறது திமுக. என்னதான் ஐடிவிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும், அதிமுக, பாஜக, நாதக, பாமக, இடையில் தவெக என பலமுனை தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள திமுக கூட்டணி கட்சியினரை வைத்து சமாளிக்க பார்க்கிறது.
மதிமுக எம்.பி துரை வைகோ இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் தான் குறைவு என பேட்டி அளிக்க, வன்னி அரசு ஒருபடி மேலே போய் பாஜக ஆளுநர்கள் பாலியல் புகாரில் சிக்கிய பட்டியலை வாசித்து மூக்குடைப்படுகிறார். அவரது தலைவர் திருமாவளவனே காவல்துறை அனுமதி மறுப்பதை கண்டித்தும் யார் அந்த சார் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இன்னொரு தோழமை கட்சி மார்க்சிஸ்ட் கட்சி காவல்துறையை கடுமையாக கண்டிக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சில அமைச்சர்கள் கையிலெடுத்து பேசியதும் பெரிதாக எடுபடவில்லை. கைது செய்யப்பட்ட ஞான சேகரன் விவகாரத்தில் என்ன முட்டு கொடுத்தும் அதுவும் எடுபடவில்லை. இந்நிலையில் மேலும் மும்மூரமாக பாஜக மகளிரணி, பாமக மகளிரணி போராட்டத்தில் குதித்த நிலையில் இன்று பாஜக மகளிரணி போராட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தன் பங்குக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முட்டுக்கொடுக்க கே.டி.ராகவன் விவகாரத்தை எடுத்து பேச இதுபற்றி ஆர்ப்பாட்த்தில் கைதான குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் ஆவேசமடைந்தார்.