தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..!
தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே, அவையையும், தேசிய கீதத்தையும் அவமரியாதை செய்ததே ஆளுநர் ஆர்.என். ரவிதான் என்று கொந்தளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்
2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் ஆர்.என். ரவி பேரவை தொடங்கியதும் தனது உரையை வாசிக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டது
அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதமே பாடப்படுகிறது. இன்று ஆளுநர் சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர், முதலமைச்சர் ஆகியோருக்கு மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக கவர்னர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முதலில் எல்லாம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போன்றவர்கள்தான் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். இப்போதிருக்கும் ஆளுநர் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்கும் விதத்தில்தான், செயல்படுகிறார்.அதிமுக ஆட்சியிலும் கூட, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து பேரவைத் தொடங்கி, அவை முடியும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளார்.அதுபோலவே, இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, அவைத் தலைவர் உரை நிறைவு பெற்றதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டுத்தான் அவை நிறைவு பெற்றுள்ளது.
எனவே தேசிய கீதத்துக்கு எப்போதும் தமிழக மக்கள் அவமரியாதை செய்பவர்கள் அல்ல. தமிழக சட்டப்பேரவையும் அவமரியாதை செய்வது அல்ல. ஆனால், வேண்டுமென்றே இந்த வாதத்தை முன்வைத்து ஒரு நாடகத்தை நிகழ்த்தியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி என குற்றம்சாட்டினார்.
தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே, அவையையும், தேசிய கீதத்தையும் அவமரியாதை செய்ததே ஆளுநர் ஆர்.என். ரவிதான். எனவே, அவர் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவியே வெளியேறு என்ற என்ற நிலையை ஆளுநர் உருவாக்கி வருகிறார். தனக்கு மட்டுமே தேசப்படுத்தி பீரிட்டு வருவது போல் ஆளுநர் பேசி வருகிறார்.ஆளுநர் பதவி காலம் நீட்டிக்க அவருக்கு தகுதி இல்லை எனவும் அவர் அந்த பதவியில் ஓட்டி கொண்டுள்ளார். அது அவருக்கு தான் அவமானம் எனவும்
அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..!
இதையும் படிங்க: பொள்ளாச்சி மேட்டர கெளறீங்களா...! இந்தா வாங்கிக்கோ திருப்பி அடிக்கும் அதிமுக!