×
 

குடிகார அண்ணன் செய்த காரியம்..! ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடுரோட்டில் வெறிச்செயல்!

உடன்பிறந்த அண்ணனை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்திக்கொன்ற தம்பி

தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உடன்பிறந்த அண்ணனை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, தம்பியே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் சோமரம்பேட்டாவைச் சேர்ந்தவர் குகுலோட் கன்யா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் உமேஷ் மேட்சல். டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான உமேஷ், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதும், குடும்பத்தில் பிரச்னை செய்வதையுமே வழக்கமாக கொண்டிருந்தார். இதன் காரணமாக உமேஷுக்கும் அவரது தம்பி ராகேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த உமேஷ், மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். தடுக்க வந்த தம்பி ராகேஷையும் அடித்துள்ளார். தகராறு முற்றவே, பீர் பாட்டிலால் ராகேஷை, உமேஷ் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், உறவினர் லட்சுமணன் என்பவருடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றுள்ளார்.

இதையும் படிங்க: கூட்டமாய் மோடியை பார்த்த அக்கிநேனி நாகார்ஜுனா குடும்பம்..! தெனாலி பொம்மை பரிசளிப்பு

அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய உமேஷ், வீட்டில் இருந்து 150 மீட்டர் தூரம் ஓடி நெடுஞ்சாலையை அடைந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத ராகேஷும், லட்சுமணனும் உமேஷை 12 முறை கத்தியால் குத்தி கொன்றனர். பரபரப்பான NH44ல் இந்த கோர சம்பவம் நடந்தது. அவ்வழியாக பல வாகனங்கள் சென்ற போதும் கொலையை தடுக்க யாரும் முன்வரவில்லை.

தற்போது ராகேஷ் மற்றும் லட்சுமணன் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினின் நாடகம் கலைந்துவிட்டது... சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் கோபம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share