×
 

நீலகிரி மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்..!

நீலகிரி மாவட்டத்தின் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதான அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.

ஏப்ரல் 6ஆம் தேதி நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உதகையில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பழங்குடியினருக்கான பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நாட்டிலேயே பழங்குடியினருக்கு என 50 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டிருப்பது உதகை அரசு மருத்துவமனையின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார். தற்போது தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு மருத்துவமனை ரூ 16.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கட்டபெட்டு, மசினகுடி, அம்பலமூலா, கிண்ணக்கொரை, உள்ளிட்ட 6 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் நலவாழ்வு மையங்களும், முள்ளிமலை, மசக்கல், நெடிக்கோடு, சேலாஸ் ஆகிய நான்கு இடங்களில் புதிதாக துணை சுகாதார நிலையங்களும், தெப்பக்காடு மற்றும் இத்தலார் ஆகிய இரண்டு இடங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடம் மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டடமும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு.. ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்..!

 கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே உதகை மருத்துவமனை பணிகளை முடித்துள்ளதாகவுன் கூறினார். நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத் துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது என்றும் இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் உதகையில் தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

 நீலகிரி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5, 6ஆம் தேதிகளில் வருகை புரியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் 6ஆம் தேதியன்று நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாகவும், 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவ மனையில் கூடுதல் கட்டடத்தையும் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைக்க உள்ளதாகவும் தற்போது நீலகிரியின் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: பொன்முடி மீது சேறு வீசியவருக்கு ஜாமீன்.. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share