×
 

பழனி டு திருப்பதிக்கு மீண்டும் பஸ் சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்ன குட்நியூஸ்..!

பழனியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 

பழனியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 

பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மதுரை மாவட்டம்  அழகர்கோவில் மலை மீது அமைந்துள்ள முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலையில் ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் இன்று தரிசனம் மேற்கொண்டார். 

ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தமிழகத்தில் முக்கியமான கோவில்களில் கடந்த இரண்டு நாட்களாக தரிசனம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ள முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலையில் இன்று காலை தரிசனம் செய்தார். பழமுதிர்சோலை முருகன் கோயிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: லாபத்தில் பிஎஸ்என்எல்! 17 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக ரூ.262 கோடி..!

கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், தன்னுடைய நீண்ட நாள் கனமான ஆறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது தற்போது நிறைவேறி உள்ளதாகவும் மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தவர், தமிழ்நாட்டு மக்களின் அன்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாகவும் தான் ஏற்கனவே ஏழு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்ததால் தமிழக மக்களின் அன்பு தனக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார். 

ஆறுபடை வீடுகளின் தேவைகளுக்கு ஏற்ப கோவிலின் வளர்ச்சிக்கு தன்னுடைய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட  திருப்பதி பழனி பேருந்து போக்குவரத்து சேவை மற்றும் ரயில் சேவை ஆகியவை பக்தர்களின் வசதிக்காக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தவர், திருப்பதி கோவிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: தேசத்தை கட்டி எழுப்புதல் என்ற பெயரில் அதானியின் பைகளை நிரப்புகிறார் - பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share