காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. ஐந்து பேரை லாவகமாக பிடித்த போலீஸ்..
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது கடந்த மூன்றாம் தேதி அன்று இரவு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக அடையாளம் தெரியாத இரண்டு பேர் முகமூடி அணிந்து குண்டுகளை பெட்ரோல் குண்டுகளை வீசியதையடுத்து காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் அதன் மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு? அன்புமணி இராமதாஸ் ஆவேசம்..
இதனை அடுத்து சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன், பரத்ராஜ், விஷால், திலீபன் உள்ளிட்ட ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத் சுக்லா பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையின் படி நான்கு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்குகிறது இலங்கை-நாகை கப்பல் வழி பயணம்..! கப்பல் நிறுவனம் அளித்த சலுகைகள் என்ன என்ன தெரியுமா..?