மார்க் வேணுமா? வேலை வேணுமா? மாணவிகளை சீரழித்த பேராசிரியர்.. 30 மாணவிகளின் 60 ஆபாச வீடியோ..!
உத்தரபிரதேசத்தில் மதிப்பெண் மற்றும் கேம்பஸில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை சிதைத்த கல்லூரி பேராசியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பெரும்பாலானவை அவர்களுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள் போன்று அநேகமாக அந்த பெண்ணுடம் தொடர்பில் இருப்பவர்களே அந்த பெண்ணிற்கு தீங்கு விளைவிக்கும் படி, பாலியல் தொல்லை அளிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல் சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு சக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களே பாலியல் தொல்லை அளிப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இதேப்போல் உத்தரபிரதேசத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் 30க்கும் மேற்பட்ட மாணவிகளை சிதைத்தது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 54 வயதான ரஜ்நீஷ் குமார் என்பவர் பல ஆண்டுகளாக புவியியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக அங்கு பயிலக் கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் அதனை உள்பஞ்சாயத்து நடத்தி மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. பெயர், முகவரி குறிப்பிடாமல் அந்த கடிதம் வந்துள்ளது. அதில் கல்லூரி பேராசியர் ரஜ்நீஷ் குமார் பல மாணவிகளை சிதைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கல்லூரியின் பெயரை குறிப்பிட்டு அங்கு புவியியல் பேராசியராக பணிபுரிவர் ரஜ்நீஷ் குமார் என்றும்,
அவர் மதிப்பெண் மற்றும் வேலை வாய்ப்பில் உதவுவதாக கூறி, கடந்த பல வருடங்களாக மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தது. அவர் மீது கல்லூரியில் பாலியல் புகார் கொடுத்தும் பயனில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடிதம் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் தயாரானது. உத்தரபிரதேசம் காவல்துறைக்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம், விசாரணையை துவங்கியது. போலீசரும் ரஜ்நீஷ்குக்கு சம்மன் அனுப்பினர். போலீசாரின் சம்மன் கிடைத்ததும் ரஜ்நீஷ் தனது போனில் இருந்த வீடியோக்களை அழித்துள்ளார். ஆனால் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் போலீசார் அதனை மீட்டெடுத்துள்ளனர்.
மொத்தம் 65 வீடியோக்கள் போலீசாரிடம் சிக்கியது. அதில் 30 மாணவிகளின் வீடியோ இருந்தது. சிலரின் வீடியோவை அவர் இணையத்தில் பதிவேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசரின் விசாரணையில் கடந்த 18 மாதங்களில் மட்டும் ரஜ்நீஷ்குமார் மீது கல்லூரி நிர்வாகத்திடம் 5 முறை புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரஜ்நீஷ்குமாரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இந்த விவகாரங்கள் நடந்து வந்த சமயத்தில் ரஜ்நீஷ்குமார் தலைமறைவானார். அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்ட இளைஞர்.. தையலை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!