×
 

தங்கம் கடத்த நகைக்கடையே நடத்தி வந்த நடிகை... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

தங்கக்கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராமசந்திர ராவை, கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ள நிலையில், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கம் கடத்திய நடிகை.. சர்ச்சை கருத்தால் சிக்கிய பாஜக எம்எல்ஏ..!

இந்த நிலையில் இவ்வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையையே நடிகை ரன்யா ராவ் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர். துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார். அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு துபாய் மட்டுமின்றி ஜெனிவா, பாங்காக்கை சேர்ந்த நகை வியாபாரிகளுடனும் தொடர்பு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இதற்காக தான் துபாயில் நகைக்கடையை 2 பேரும் நடத்தி வந்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, தான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும், சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக துபாய் அதிகாரிகளை ரன்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார் மற்றும் இதற்காக அவரிடம் அமெரிக்க நாட்டு விசாவும் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து அவர் பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார். பெரும்பாலும் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றுவிட்டு, திரும்பி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக அவர் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதும், அவருக்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இருவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் பல கோடி ரூபாய் வந்திருப்பது, உடனடியாக மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்தனையடுத்து, அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், ரன்யா ராவ், தருண் ராஜுக்கு வந்திருந்த வெளிநாட்டு செல்போன், தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன்..! தங்கக் கடத்தலில் கைதான நடிகை வாக்குமூலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share