×
 

விடுதி வளாகத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: உடன் படித்த மாணவர் கைது; நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமை அவலம்..

மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் விடுதி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய புகாரின் பேரில் உடன்படிக்கும் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இதே போன்ற ஒரு அவலம்  அரங்கேறி உள்ளது.

குவாலியர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் 25 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் பக்கத்தில் இருந்த மாணவர் விடுதியில் தங்கி இருந்தார்.

இதையும் படிங்க: GATE 2025 நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எவ்வாறு பதிவிறக்கம் செய்வது..?

ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாணவர் மாணவிக்கு போன் செய்து தன்னை வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறார். "உடன் படிக்கும் நண்பர் தானே தேர்வுக்காக சில சந்தேகங்களை அவர்களிடம் கேட்கலாம்" என்று நினைத்து அந்த மாணவியும் அவரை பார்க்க சென்றிருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவர் மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் சிங் ஜாரடன் அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து பாலியல் பலாத்கார குற்றப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பகுதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தார். 

போலீஸ் குழுவினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த இடம் பழைய விடுதி கட்டிடம் ஆகும். தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் அங்கு யாரும் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீறிய அந்த மாணவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக வேறு யாரும் இருந்தனரா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குற்றம்போல் நாடு முழுவதும் தொடர்வது கவலை அளிப்பதாக உள்ளது.


தேர்வு எழுதுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜன. 5) அன்று மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அந்த மாணவர், மாணவியை சந்திக்க வரும்படி கூறியுள்ளார். அதன்படி ஆண்கள் விடுதி வளாகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது மாணவர் வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் மாணவி புகார் அளிக்க, மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயிரை குடித்த "பிராங்க்" ...சகமாணவர்களால் கதறி அழுத ஆடியோ ..பிறந்த நாளில் கல்லூரி மாணவர் தற்கொலை ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share