×
 

நடிகையை ஏமாற்றி சீமான் உறவு... 6-7 முறை கருக்கலைப்பு... உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத்துறை பிரச்னை காரணமாக சீமானை, விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர்.

பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் சீமான் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். வளசரவாக்கம்காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்த நிலையில், தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு நடிகை விஜயலட்சுமி சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376 ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை, 2012 ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நாதகவில் சாதிய பாகுபாடு... கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி.. சீமான் மீது பகீர் குற்றச்சாட்டு..!

சீமான் அளித்த மனு மீதான வழக்கு இம்மாதம் 17ம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் அவர், ‘விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது.’ என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

தன் மீதான நடிகையின் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த மனுவின் தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது. மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப்பெற்றது தெளிவாகிறது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் ''சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்று உள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்.

01.09.2023 அன்று திருவள்ளூர் மகிளா நீதிபதி முன்பு ஆஜரான விஜயலட்சுமி தன்னை சீமான் திருமணம் செய்து கொள்ள உறுதி அளித்ததால் வழக்கை வாபஸ் பெற தனது வழக்கறிஞரிடம் கடிதம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இரண்டு வாரம் கழித்து 16.09.2023 அன்று வளசரவாக்கம் காவல் ஆய்வாளரிடம் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்திருக்கிறார். ஒரு வாரம் கழித்து 23.09.2023 அன்று வழக்கை வாப்ஸ் பெறப் போவதில்லை என்று வாட்ஸப் தகவல் அனுப்பி இருக்கிறார். நடந்தவற்றைப் பார்க்கும் போது விஜயலட்சுமி மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி கூறியுள்ளார். விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது. மிரட்டல் காரணமாக புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றது தெளிவாகிறது.மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது  

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது.
வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத்துறை பிரச்னை காரணமாக சீமானை, விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார். சீமானின் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது'' என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் சீமானின் குற்றத்தை உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: பெரிய கட்சிகள் கூப்பிட்டே போகாதவன்.. விஜய்யிடம் கூட்டணி வைப்பேனா.? தவெக கூட்டணிக்கு நோ சொன்ன சீமான்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share