×
 

எனக்காக இதை செய்யுங்க விஜய்! மரணப்படுக்கையில் கோரிக்கை வைத்த ஷிகான் ஹூசைனி!

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளார். 

இவர் கே.பாலசந்தர் மூலம் 'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்துள்ளார்.

விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த ஹுசைனி விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டவருக்கும் கராத்தே பயிற்சி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு வழியா சொல்லிட்டாரு பா..! திமுகவை நேரடியா அட்டாக் செய்த விஜய்..!

இந்நிலையில் தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அதில், தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது என்றும் 4 வது நிலையை அடைந்துவிட்டதாகவும், இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஜெனட்டிக் பிரச்சனையால் வந்திருக்கலாம், ஏதேனும் வைரஸால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும் என்றும் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

தனக்கு மன தைரியம் அதிகம் உள்ளதாக பேசியுள்ள ஹுசைனி, கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டதாகவும், அந்த இடத்தில் தான் பவன் கல்யாண் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

 தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் விஜய் உருவாக்க வேண்டும் எனவும் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் முகத்தில் கறி பூசிய அண்ணாமலை... ஆதாரங்களை அள்ளி வீசி அதிரடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share