×
 

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் என்ன சிக்கல், ஏன் தாமதம்..? புற்றுநோய் வருமா..?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் என்ன சிக்கல், ஏன் தாமதம் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை அனுப்ப நாசா முடிவு செய்திருந்த நிலையில் அதை ஒத்திவைத்துள்ளது. நாசாவும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளனர். 

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றனர். 7 நாட்களில் இருவரும் பூமிக்குத் திரும்பி வர வேண்டிய நிலையில், திடீரென்று ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது, ஹீலியமும் தீர்ந்து போனது. 

இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவது தாமதமாகி 9 மாதங்களாக விண்வெளியில் இருவரும் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டு அவர்களுக்குப் பதிலாக புதிய விண்வெளி வீரர்களை தங்கவைக்கவும் ஏற்பாடு செய்தது. 

இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது ஒன்பது மாத காத்திருப்பு.. பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.. நாள் குறித்த நாசா!

ப்ளோரிடா ஏவுதளத்தில் இருந்து க்ரூ-10 மிஷன் ஃபால்கன் ராக்கெட் ஏவத் நாசா திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ராக்கெட்டில் விண்வெளிவீரர்கள் ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இருந்தனர், இவர்கள் சர்வதேச விண்வெளிநிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் பூமிக்கு அனுப்பி வைத்து, இவர்கள் 4 பேரும் அங்கு பணியாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ஃபால்கான் 9 ராக்கெட்டில் இருக்கும் ஹைட்ராலிக் சிஸ்டமான, ராக்கெட்டை உந்தி நிலத்தில் இருந்து தள்ளும் ஹைட்ராலிக் இயங்கவில்லை எனக் கூறி புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக பயணத்தை ஒத்திவைத்தது நாசா. ராக்கெட்டில் நிலவிய கோளாறுகளை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 

சுனிதா எப்போது பூமிக்கு திரும்புவார்?

ஃபால்கன் ராக்கெட்டில் உள்ள ஹைட்ராலிக் சிஸ்டம் சரி செய்யப்பட்டால் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு மார்ச் 19ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை ராக்கெட் அடையும். அங்கிருந்து ராக்கெட் மூலம் புறப்படும் சுனிதா, வில்மோர் இருவரும் வியாழக்கிழமை காலை 6.18 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள கேப் கெனரவலில் ஏவுதளத்தில் ராக்கெட் தரையிறங்கும்.

சுனிதா வில்லியம்ஸ் உடல்ரீதியாக பூமியில் என்ன சிக்கலை சந்திப்பார்?

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவருக்கும் பூமிக்கான வருகை சாதாரணமாக இருக்காது, பூமியின் புவிஈர்ப்புசக்தியை சமாளிக்க இருவரும் சில வாரங்கள் போராடுவார்கள். இதுவரை புவிஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் இருந்துவிட்டு இப்போது பூமிக்கு வந்தவுடன் உடல்ரீதியாக மாற்றங்கள் உருவாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாசா முன்னாள் விண்வெளி வீரர் லெராய் சியோ கூறுகையில் “விண்வெளியில் இருந்து சுனிதா பூமிக்கு வந்தவுடன் அவரின் உடலில் இருந்த தடித்ததோல் சுருங்கிவிடும். உடல்எடை குறையும், மயக்கம், வாந்தி, குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமியில் வாழ்வதற்கான சூழலைப் பெற 2 வாரங்களாகும் எனத் தெரிவித்தார்.

சுனிதாவுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறதா?

சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் 10 மாதங்கள் வரை விண்வெளியில் தங்கியதால், அவர்கள் உடல் பூமிக்கு ஏற்றார்போல் மாறி இருக்காது. சூரியன், விண்வெளியில் வெளியாகும் பல்வேறு கதிர்வீச்சுக்கு நேரடியாக இருவரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தி ஹெல்த் சைட் எனும் நாளேடு கூறுகையில் “பூமியைவிட விண்வெளி கடினமான தன்மை கொண்டது, குறிப்பாக மனித உடலுக்கு ஏற்றதல்ல. ஆனால், பூமி என்பது காந்தப்புலம் கொண்டது, விண்வெளியில் இருந்தும், கதிர்வீச்சிலிருந்தும் வந்த இருவரும் காந்தப்புலமான பூமிக்கு வந்தவுடன் உடல்ரீதியாக மாற்றங்கள் உருவாகும்.

குறிப்பாக புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. விண்வெளி செல்லும்  வீரர்கள் எதிர்கொள்ளும் முக்கியமானது புற்றுநோய் ஆபத்து. சூரிய கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், சர்வதேச விண்வெளிநிலையத்தில் பணியாற்றும்போது உடலில் படும்போது ஆபத்தாக மாறும்.நம்முடைய உடலின் டிஎன்ஏ செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பூமியில் இருக்கும்போது ஒருவர் அனுபவிக்கும் கதிர்வீச்சைவிட 20 மடங்கு விண்வெளியில் ஒருவர் அனுபவிப்பார். உடலில் கட்டிகள், உள்ளுருப்புகளில்கட்டிகள், லுக்கிமேனியா வரவும் வாய்ப்புள்ளது. சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நீண்டகாலத்தில் வாழ்நாள்முழுவதும் புற்றுநோயால் கூட பாதிக்கப்படலாம். 

குறிப்பாக நுண் புவிஈர்ப்புவிசை தாக்கத்தால் சுனிதா, வில்மோர் பாதிக்கப்படலாம். சர்வதேச விண்வெளியில் மிதக்கும்போது இருவரின் உடல் உறுப்புகளும், ரத்தம், மூளையின் சுரப்பிகள் அனைத்தும் புவிஈர்ப்புவிசை கிடைக்காமல் அந்தரத்தில் இருக்கும், மிதக்கும் நிலையில் இருக்கும். புவிஈர்ப்புவிசை இல்லாததால் மூளையில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் தலைவலி, பார்வைியல் கோளாறு, மூளையில் நீண்டகாலத்தில் மாற்றம் ஏற்படலாம். புவிஈர்ப்பு விசையோடு மனிதர்கள் இருந்தால்தான் உடல்உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
 

இதையும் படிங்க: 28000 கிமீ வேகமும்... 3000 டிகிரி வெப்பமும்... சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப முடியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share