×
 

இந்தி எதிர்ப்பு போராட்டம்.. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு சென்றால்... எச்சரிக்கும் தொழில் அமைப்பு!

இந்தி எதிா்ப்பு போராட்டம் தமிழகத்தில் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல நேர்ந்தால், தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும் என்று தமிழ்நாடு தொழில் முனைவோா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், இரு கட்சியினரும் வாக்கு வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் சில பகுதிகளில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திலும் திமுகவினர் ஈடுபட்டனர். பாஜகவினர் மும்மொழி பாடத் திட்டத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது சார்ந்து தமிழ்நாடு தொழில் முனைவோா் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில், பொறியியல் தொழில், உணவுப் பொருள்கள் உற்பத்தி, பலவகையான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தமிழகம் பெரும் போட்டியை எதிா்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.



இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய பிரச்னையாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆளும் கட்சியினா் இந்தியைக் கட்டாயப்படுத்துவதாகவும், மத்திய அரசு அப்படி இல்லை என்றும் சொல்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். இந்தியை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவா்கள் தமிழகத்தில் தொழிலாளியாக அனைத்து பிரிவிலும் உள்ளனா்.

இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவானால் வடமாநிலத்தவா்கள் சொந்த ஊா்களுக்குச் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்படும். அவ்வாறு சென்று விட்டால் தமிழகத்தில் அனைத்து தொழில்களும் மூடும் அபாயம் ஏற்படும். பொருளாதாரம் பாதிக்கும். ஆகவே, அப்படி ஒரு நிலைமை உருவாக வேண்டாம் என்று அனைத்து கட்சித் தலைவா்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.99 லட்சம் பரிசு. .! ஹிந்தி திணிப்பை நிரூபிச்சு காட்டு? திமுகவுக்கு பிஜேபி சவால்

இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் கூட்டம் - முப்பெரும் தீர்மானங்கள் நிறைவேற்றம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share