மக்களை திசை திருப்பாதிங்க! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட தமிழிசை.
மக்களை திசை திருப்பவே அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பாஜக பங்கேற்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,, உண்மையான பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகி வருவதாகவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: ஊடகத்தில் வாய்ச்சவடால் விடும் அண்ணாமலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து பேசட்டும்- முத்தரசன் விளாசல்
மேலும் வேங்கை வயல் விவகாரத்தில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறிய தமிழிசை, தனது கூட்டணி கட்சி மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று வரை கொலையாளி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இவை அனைத்தையும் மறைப்பதற்காக சர்வ கட்சி கூட்டம் நடத்தப்படுவதாகவும் கூறினார்..
இல்லாத பொருளை வைத்து கூட்டம் போடுவதாகவும், இது தமிழக மக்களை திசை திருப்புவதற்கான முயற்சி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஆளுநரே அரசியல் செய்ய அண்ணாமலை இருக்காரு.. அவரோடு ஏன் போட்டி.? கச்சத்தீவு கருத்துக்கு அமைச்சர் ரகுபதி ஆவேச பதிலடி!