×
 

டாஸ்மாக் நிர்வாகத்தின் கள்ள ஒப்பந்தம்… ரூ.50000 கோடி மோசடி..? ED ரெய்டின் பகீர் பின்னணி..!

டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கு பில் கொடுங்கள் அல்லது ஒரு பார்கோடு சிஸ்டம் மூலம் பாட்டில்களை ஸ்கேன் செய்து விற்பனை செய்யுங்கள் என்று நீதிமன்றம் 56 முறை சொன்ன பிறகும் டைம் பாஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில்,  2வது நாளாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந் ரெய்டு நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி தொடர்பான இந்த ரெய்டு குறித்து மூத்த வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அதிர வைக்கும் தகவல்களை தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 60 சதவீதத்திற்கு அதிகமான மது பாட்டில்களை சப்ளை செய்வது ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்லரி, ஜெய முருகனின் எஸ்.என்.ஜே என்னும் நிறுவனம் கல்ஸ் என்னும் திமுகவின் மூன்று நிறுவனங்கள்தான். இந்த மூன்று  நிறுவனங்களிடம்  இருந்து சரக்கு பாட்டில்களை வாங்கும் தமிழக அரசின் டாஸ்மாக் மைய கருவூலத்தில்  அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் இறங்கிய அமலாக்கத்துறை... தொடரும் அதிரடி ரெய்டு தற்போதைய நிலவரம் என்ன? 

 இந்த மூன்று நிறுவனங்களும் டாஸ்மாக் கருவூல கணக்கில் வராமல் தனியாகவே லேபிள் அடித்து மது கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டு வருகிறார்கள் என்பது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் குற்றச்சாட்டு.

அதாவது இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரு லட்சம் பாட்டில் வெளியே வருகிறது என்றால், அதில் 50 ஆயிரம் பாட்டில்கள் டாஸ்மாக் கருவூலத்தில் பதிவு செய்யப்பட்டு மது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மீதி 50,000 பாட்டில்கள் டாஸ்மாக் பாட்டில்கள் போல ஸ்டிக்கர் எல்லாம் இருக்கும் ஆனால் டாஸ்மார்க் சிஸ்டம் கணக்கில் வராது நேரடியாக மது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உதாரணமாக, 20 ரூபாய்க்கு ஒரு பாட்டிலை மது தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் நிறுவனம் வாங்கி, அதை 140 ரூபாய்க்கு விற்கும். அப்போது 120 ரூபாய் லாபம் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு அதாவது அரசாங்கத்து கிடைக்கிறது. அதே பாட்டிலை 20 ரூபாய்க்கு அந்த மது தயாரிப்பு நிறுவனத்தில்  இருந்து வாங்கி டாஸ்மாக் டேட்டா பேஸில் ஏற்றாமல் டாஸ்மாக் கடைகளில் வைத்து விற்கும் போது 120 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இப்போது இந்த லாபம் அரசாங்கத்திற்கு போகாது. டாஸ்மார்க் கருவூல கணக்கில் வராத பாட்டில் என்பதால் இவர்களே இந்த பணத்தை எடுத்து விடுவார்கள்.

இது டாஸ்மாக் கடையில் வேலை செய்பவர்களுக்கு புரியாது. டாஸ்மாக் சரக்கை அனுப்பும் அரசு கருவூலத்திற்கும், சரக்கு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான கள்ள ஒப்பந்தம் இது. இந்த கள்ள ஒப்பந்தத்தில் ஈடுபட்டது மேலே சொல்லப்பட்ட மூன்று மது தயாரிப்பு நிறுவனங்களும்தான். இந்த ஸ்டைல் ஆப் பிசினஸை ஆரம்பித்து வைத்தது செந்தில் பாலாஜி. அப்படி என்றால் கிட்டத்தட்ட டாஸ்மார்க் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு என்ன வருமானம் கிடைக்கிறதோ... அதே வருமானம் இவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்பதுதான் இதில் இருக்கும் பொருள். 

டாஸ்மாக் ஆண்டுக்கு 50000 கோடி ரூபாய் லாபம் ஏற்றுகிறது. இதே அளவு லாபத்தை இந்த செந்தில் பாலாஜியும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பது தான் இதில் இருக்கும் சிறப்பு. அந்த வித்தையின் மூலம் அவர் சம்பாதித்த பணம் ஏராளம். அந்த பணத்தை வைத்துதான் அவர் அரசியலில் சிறந்த நிர்வாகியாக மாறினார்.

செந்தில் பாலாஜி இந்த மூன்று மது தயாரிப்பு நிறுவனங்களோடு சேர்ந்து ஏமாற்றிய பணத்தை முறைகேடாக சட்டவிரோத பரிமாற்றம் செய்து அதை தேர்தல் செலவுக்காகவும், மற்ற வகை செலவுகாகவும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து இந்த சோதனையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது புரிகிறதா? டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கு பில் கொடுங்கள் அல்லது ஒரு பார்கோடு சிஸ்டம் மூலம் பாட்டில்களை ஸ்கேன் செய்து விற்பனை செய்யுங்கள் என்று நீதிமன்றம் 56 முறை சொன்ன பிறகும் டைம் பாஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது...

தமிழக அரசின் #டாஸ்மார்க் நிறுவனத்திற்கு 60 சதவீதத்திற்கு அதிகமான மது பாட்டில்களை சப்ளை செய்வது ஜெகத்ரட்சகன் அவர்களின் அக்வாட் டிஸ்லரி, ஜெய முருகனின் SNJ என்னும் நிறுவனம் மற்றும் KALS என்னும் திமுகவின் மூன்று நிறுவனம்நகள்.. இந்த மூன்று நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மற்றும் இந்த…

— K.S.Radhakrishnan (@KSRadhakrish) March 6, 2025

 

அப்படி ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்தால் எல்லாமே வெளிப்படைத்தன்மையாக நடக்க வேண்டி இருக்கும். இவர்களுக்கு போகும் இந்த பணம் போகாமல் நின்று விடும் என்பதற்காக இன்னும் பழைய மன்னர் காலத்து கற்காலத்து கணக்கு வழக்கு முறையை கையாண்டு கொண்டு வந்திருக்கிறார்கள்'' என்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு குறி.. மதுபான நிறுவனங்களிலும் ரெய்டு- பின்னணியை விளக்கிய ED அதிகாரி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share