×
 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..வஞ்சிக்கப்படும் பட்டியலின மக்கள் ..கங்கை அமரன் கடும் தாக்கு !

வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளியை காவல் துறையும் தமிழக அரசும் நினைத்தால் கைது செய்திருக்கலாம் என கங்கை அமரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

புதுக்கோட்டை அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு திரைப்பட இயக்குனரும் பாஜக பிரமுகரமான கங்கை அமரன் வருகை தந்தார் அவரை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகமுத்து வரவேற்று அம்பேத்கர் சிலை பொம்மையை பரிசளித்தார் .இதன் பின்னர் கங்கை அமரன் செய்தியாளரிடம் பேசுகையில் கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது ஆனால் தற்போது வரும் திரைப்படங்களில் கதைக்கு இடமில்லை அடி உதை குத்துக்கு தான் இடம் மக்கள் அதை நோக்கி சென்று விட்டனர் இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரித்துவரும் போதை கலாச்சாரத்தால் படப்பிடிப்பு எடுக்கவே இடையூறாக உள்ளது என்றார்.


தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை , தமிழகத்தில் பட்டியலின சமூக மக்கள் இன்னும் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலை தான் உள்ளது,நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் கூட பட்டியல் இன மக்களுக்கான முழு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை.வேங்கை வயல் சம்பவத்தில்  குற்றவாளியை காவல் துறையும் தமிழக அரசும் நினைத்தால் கைது செய்திருக்கலாம் ஆனால் அவர்கள் நினைக்கவில்லை என்று விமர்ச்சித்தார்

தொடர்ந்து பேசிய கங்கை அமரன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிய தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமாக இருந்து வருகிறார் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளி யார் என்றும் அவர் எதன் பின்னணியில் இதனை செய்தார் என்பது குறித்தும் தெளிவாக எடுத்து காண்பித்தும் அரசு அதை மறுக்கிறது யாரை காப்பாற்றுவதற்காக அரசு இவ்வாறு செய்கிறது என்று தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: 100 % வலுவானது ..பாதுகாப்பானது ..செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு

 

இதையும் படிங்க: புது வெள்ளை மழையில் கொடைக்கானல் ... உறைபனியை ரசிக்க குவியும் சுற்றுலாபயணிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share