ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்... இன அழிப்பு தடுக்கப்படுமா?
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இயக்குநர்கள் குரலெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இயக்குநர்கள் குரலெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரைத்துறையில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
அனோரா திரைப்படம் 5 பிரிவுகளின் கீழ் விருது பெற்றது. ஆஸ்கர் விருது விழா என்றாலே லாஸ் ஏஞ்சல்ஸ் விழா கோலமாக ஜொலிக்கும். ஆஸ்கர் விருதை பெற உலக திரைப்பிரபலங்கள் அங்கு திரண்டு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருக்கும். அனைத்து திரைத்துறையினரும் ஒரே இடத்தில் இருப்பதால் உலக நாடுகளின் கவனமும் லாஸ் ஏஞ்சல்ஸ் மீது இருக்கும்.
இதையும் படிங்க: காசாவைக் கைப்பற்றுவோம்..! பாலஸ்தீனியர்களை விரட்டுவோம்..! அதிபர் டிரம்ப் அதிரடி
இப்படிப்பட்ட மேடையை ஒருசிலர் பயன்படுத்தி கொண்டு தங்களின் கருத்துகள், கோரிக்கைகளை வைப்பது வழக்கமாகி வருகிறது. ஆஸ்கர் மேடையில் முழங்கினால் அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் இந்த ஆண்டின் ஆஸ்கர் விழாவிலும் நடந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணப்படுத்துக்கான விருது ‘நோ அதர் லேண்ட்’ படத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை இஸ்ரேலிய பத்திரிகையாளர் யுவல் ஆபிரகாம், பாலஸ்தீனிய பத்திகையாளர் பாஸல் அட்ரா, ஹம்டன் பல்லால், ரேச்சல் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பெற்று கொண்டனர். விருதை பெற்ற அவர்கள் பாலஸ்தீன மக்கள் போரினால் பாதிக்கப்படுவது குறித்து பேசி குரலெழுப்பினர். காஸா போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாகவும், தங்களின் வாழ்வாதாரமும், இனமும் அழிக்கப்படுவதாக கூறி வேதனை தெரிவித்த அவர்கள், இந்த போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: ரமலான் நோன்பு தொடங்கிய விசிக தலைவர்... 21ஆவது ஆண்டாகத் தொடரும் திருமாவளவன்.!