“ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்!
விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்படுப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்படுப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் இரண்டு ஆண்டுகளைக் கடந்து விசாரணை நடத்தியது. இரு தினங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த நிலையில், அது நேற்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதில் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன் சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்க இது போல் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்தவர் மீது குற்றச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கோ தொடர்பிருக்கும் நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த 3 பேரை குற்றம்சாட்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வேங்கை வயல் மற்றும் இறையூர் பகுதிகளுக்கு வரும் வழிகளில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வேங்கைவயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்குள் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் செல்ல காவல்துறையினர் தடைவிதித்துள்ளதோடு, வேங்கைவயல் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட செல்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் வேங்கை வயல் மக்கள் போராட்டம் நடத்தக்கூடிய பகுதிகளிலும் அதேபோல் வேங்கைவயல் சுற்றுவட்டார பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக விசிகவினரும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ள நிலையில் ,ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதிகளிலும் அதேபோல் வேங்கைவையல் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வேண்டாம் புறக்கணிப்பு.. அதிமுகவுக்கு சரிவு தொடங்கிவிடும்.. அதிமுக மீது திருமா கரிசனம்!