×
 

டிராபிக்கை குறைக்க இதுதான் வழி! அரசுக்கு காவல்துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகள்

பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பணிக்கு செல்பவர்கள் என காஞ்சிபுரம் மாநகரமே நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி உள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருப்பினும் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

தற்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும்செவிலிமேடு பகுதியில் இருந்து வாலாஜாபாத் அருகே உள்ள வெண்குடி வரை பாலாற்றை ஒட்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் எளிதாக பயன்படுத்த இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பெங்களூரு போக்குவரத்து நெருக்கடி பிரச்சனை.. கடவுளை வம்புக்கிழுத்த துணை முதல்வர் சிவகுமார்..!

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கூறுகையில், நீர்வள்ளூர் வரை வரும் மெட்ரோ ரயில், பொன்னேரிக்கரை வரை நீட்டிப்பதற்கு பெரிய அளவில் செலவு ஏதும் ஆகாது என்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்களுக்கும் இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும் என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: இராணுவ விமானம் வெடித்து பயங்கர விபத்து..! 46 பேர் உயிரிழந்த சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share