×
 

கருணாநிதியிடம் கையேந்தியவர்.. சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர்.. ஹெச்.ராஜாவை விடுகதை போட்டு திட்டும் தவெக!!

எம்.எல்.ஏ. பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தமிழக வெற்றிக் கழகம் விமர்சனம் செய்துள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது. இதையடுத்து திமுக அரசை எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கைது செய்யாமல் அதிகாரம் கையில் இருந்தும் பாஜக போராட்டம் நடத்துவதாகவும், பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும்” விமர்சனம் செய்திருந்தார்.

இதுபற்றி தமிழக பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவிக்கும்போது, விஜய்யை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசுகையில்,  “என்னங்கடா வித்தை காட்றிங்களா” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். ஹெச்.ராஜாவின் இந்தப் பேச்சுக்கு தவெக கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் 'எக்ஸ்' வலைத்தள பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யை விளாசிய அண்ணாமலை... பதிலடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்..!!

அதில் ஹெச்.ராஜாவின் பெயரைக் குறிப்பிடாமல், “அன்புடன் ஓர் அரசியல் விடுகதை! அரசியலில் அங்கிட்டும் இங்கிட்டும் எங்கிட்டும் இல்லாதவர். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியைச் சேர்ந்தவர். எம்.எல்.ஏ. பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர். தனது 'அபரிமிதமான' சொந்த செல்லாக் காசில், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் எல்லா எதிர்க்கட்சி நபர்களையும் எளிதாக வெற்றி பெறச் செய்பவர்.

தமிழ்நாட்டிற்கு சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர். நீதிமன்றத்தை 'தரமான(?)' வார்த்தையால் விமர்சித்து, பிறகு மண்டியிட்டு, மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர். சாரட் வண்டியில் மட்டும்தான் ஏறுவேன் என்று போலீசிடம் வீர அப்பம் சுட்டவர். யார் அந்த அரசியல் சிங்கர்? குறிப்பு: காரைக்குடியிலேயே கவிழ்ந்தவர்' என வெங்கட்ராமன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ்காரங்க இவரை மாதிரி இருக்கணும்..! சசி தரூரைப் பாராட்டிய பாஜக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share