×
 

அமித் ஷா வைத்த செக்..! தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள் இருக்கிறதா..? உண்மை நிலை என்ன..? கேள்விகளும் விளக்கங்களும்..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை விரைவில் கொண்டு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் பகுதியில் சிஐஎஸ்எப் நாளில் ராஜதித்யா சோழா பயிற்சி மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் “மத்திய ஆயுதப்படையில் தேர்வெழுதுவோர் அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பு இருந்ததில்லை. 

வங்காளம், கன்னடா அல்லது தமிழில் தேர்வு எழுத முடியாது. ஆனால், பிரதமர் மோடி தலையிட்டு அனைத்து மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று கொண்டு வந்தார். தமிழ் தேர்வாளர்கள்கூட  தமிழில் தேர்வெழுதலாம்.

பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆதலால், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தொடங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இதைக் கேட்டு வருகிறேன், ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், விரைவில் இதை செயல்படுத்துவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘மோசமான நிர்வாகத்தை மறைக்க முடியாதுங்க’... மு.க ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!

தமிழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் படிப்பின் நிலைமை என்ன?

2010ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ் வழியில் பொறியியல் கல்வி கற்பிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். சோதனை முயற்சியாக இளநிலை சிவில் பொறியியல், இளநிலை மெக்கானிக்கல் பொறியியல் பாடங்களை தமிழ் வழியில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக 2010-11ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டது. இந்த படிப்புகளுக்கான தேர்வுத்தாள் ஆங்கிலம், தமிழலில் இருக்கும் வகையிலும், மாணவர்களுக்கு எதில் விருப்பமோ அதில் பதில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு  ஜூலை மாதம் தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்கில் ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த படிப்புகளில் முதல் ஆண்டிலேயே 149 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. 2010ம் ஆண்டு செப்டம்பரில் திமுக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தது. அதில் தமிழி வழியி்ல் படித்த மாணவர்கள் அரசு வேலைக்கு வரும்போது அவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது.

தமிழ் வழி பொறியியல் படிப்பு நிலைமை என்ன?

தொடக்கத்தில் தமிழ் வழியில் பொறியியல் படிப்பு படிக்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது, ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்கூட, தமிழ்வழியில் பொறியியல் படிப்பு எடுத்து படித்தனர். குறிப்பாக கிண்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் பொறியியல் படித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இருக்கும் பல பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பொறியியல் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல மாணவர்களிடையே தமிழ் வழியில் பொறிறியில் படிக்கும் ஆர்வம் குறைந்தது.

2023 மே மாதத்தின் நிலவரப்படி அண்ணா பல்கலைக்கழகம் விடுத்த சுற்றறிக்கையில், 11 கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தமிழ் வழி பொறியியல் படிப்புகள் 2023-24 ஆண்டிலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பு, விமர்சனங்கள் எழுந்தத்தைத் தொடர்ந்து அந்த முடிவு பின்வாங்கப்பட்டது.

துணை வேந்தர் வேல்ராஜ் கூறுகையில் “ தமிழ் வழியில் அறிமுகம் செய்யப்பட்ட சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதால் அதற்குப் பதிலாக கம்யூட்டர் சயின்ஸ், பொறியியலை தேவையின் காரணமாக அறிமுகம் செய்கிறோம். கடந்த ஆண்டில் பாடப்புத்தங்களி்ல் 50 பாடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன, இந்த முறை 500 பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டு ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்பட்டசர்வேயில் நாடுமுழுவதும் 85,195 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 12487 மாணவர்கள் மட்டுமே வாய்ப்புக் கிடைத்தால் தமிழ் வழியில் பொறியியல் படிப்பதாகத் தெரிவித்தனர்.

தமிழ்வழியில் தமிழகத்தில் மருத்துவக் கல்வி இருக்கிறதா?

தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை வழங்குவதாக 2010ம் ஆண்டு கருணாநிதி அரசு தெரிவித்திருந்தது. தொடக்கத்தில் பொறியியல் படிப்பை தமிழில் கொண்டுவந்து அதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பையும் கொண்டு வருவோம் என அப்போதைய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். 2011ம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்விக்குப்பின் செயல்பாட்டுக்கு வரவில்லை.

2022 அக்டோபரில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், தமிழ்வழியில் மருத்துவப்பாடங்களை கொண்டு வர அரசு முயன்று வருகிறது. 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தால், சென்னையில் தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

2022, டிசம்பரில் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழம் சார்பில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ மருத்துவம், அதுதொடர்பான பிரிவுகள் செவிலியர் படிப்புகலை தமிழில் கொண்டுவரலாம்” எனத் தெரிவித்தார். துணை வேந்தர் கே. நாராயணசாமி கூறுகையில் “ அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலத்தில் பாடங்கள் இருக்கின்றன, மாணவர்களுக்கு தேவைப்பட்டால் தமிழிலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

சிஆர்பிஎப் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய அரசு என்ன கூறியது?

2023 ஏப்ரலில் முதல்வர் ஸ்டாலின், சிஆர்பிஎப் தே்ரவுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தும் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, தமிழிலும் தேர்வுகளை நடத்த வேண்டும்,பிராந்திய மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், சமவாய்ப்பு அனைத்து மாநில இளைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு சிஆர்பிஎப் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் “ சிஆர்பிஎப் பணிக்கு நடத்தப்பும் தேர்வுகள் ஒருபோதும் மாநில மொழிகளில் நடத்தப்படாது. கான்ஸ்டபிள் பணிக்கு கணினி முறையில் தேர்வு நடத்தப்படும், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்கும்” எனத் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் முறையாக சிஆர்எப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர்த்து 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர்..! முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share