ஓல்டு ரிஜிமில் இருக்கலாமா.? நியூ ரிஜிமுக்கு மாறலாமா.? வருமான வரி விதிப்பில் எது பெஸ்ட்..?
பட்ஜெடில் புதிய வருமான வரி ஸ்லாப்பில் ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி இல்லை என்கிற அறிவிப்பால், சம்பளக்காரர்கள் புதிய ஸ்லாப்புக்கு மாறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதச் சம்பளக்காரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்குப் புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டினால் வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூலதன ஆதாயங்கள், கூடுதல் வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதால், ரூ.12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. புதிய முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டுள்ளது.புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி, ரூ.12,75,000-க்கு மேல் கூடுதல் வருவாய் ஈட்டுவோர் மட்டுமே வருமான வரி செலுத்த நேரிடும்.
அதன்படி இவர்களுக்கு ரூ. 4 லட்சம் வரை - வரி இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%, ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15%, ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20%, ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25%,
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த நேரிடும் ரூ.12,75 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முதல் ரூ.4 லட்சத்துக்கு மட்டுமே வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5% அடிப்படையில் ரூ.20,000, அதற்கு அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10% அடிப்படையில் ரூ.40,000 என மொத்தம் ரூ.60,000 வரியாக செலுத்த வேண்டும்.
.
அதே நேரத்தில் பழைய வரி விதிப்பு முறைப்படி செலுத்த வேண்டிய வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில், ரூ.2.50,000 வரை - வரி இல்லை. ரூ.2,50,001 முதல் ரூ.5,00,000 வரை - 5%, ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 வரை - 20%, ரூ.10,00,000-க்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பு முறையில் கணக்கிட்டால், வீட்டுக் கடன், கல்விச் செலவு, சேமிப்பு, மருத்துவச் செலவு, காப்பீடு போன்றவற்றை வைத்து வரி விலக்குக்காக ரிட்டர்ன் ஃபைல் செய்தால் கூட, ஆண்டுக்கு ரூ.60,000 செலுத்த வேண்டிய சூழலே பலருக்கும் ஏற்படலாம். மிகச் சிலருக்கே அதிக தொகை ரிட்டர்ன் வரும் வாய்ப்பு உண்டு.
இதையும் படிங்க: ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு பெஸ்ட்....!! மற்றதெல்லாம் வேஸ்ட்..! த.வெ.க தலைவர் விஜய் அதிரடி
எனவே, பழைய வரி விதிப்பு முறைப்படி ரூ.60,000-க்கும் மேலாக வரி செலுத்திய வேண்டிய நிலை வரலாம் என்பதால், பெரும்பாலானோரும் புதிய வரி விதிப்பு முறைக்கே மாற வாய்ப்புகள் அதிகம். அத்துடன், ரிட்டர்ன் ஃபைல் செய்வதற்கு எல்லா புரூப் ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். புதிய நடைமுறை வரி விதிப்பில் இவை எதுவும் தேவையில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவின் பம்மாத்து நாடகம் - மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்டாலின்!