×
 

சற்று நேரத்தில் கைதாகிறா சீமான்..? காவல்துறையின் திட்டம் என்ன..? வளசரவாக்கத்தில் கொந்தளிப்பு..!

இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில்  சீமானிடம் விசாரணை நடத்தப்படும்.  

நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

360 டிகிரி கோணத்தில் கேமராக்கள் கண்காணிக்கும் வகையிலா மொபைல் கேமரா கண்டோல் யூனிட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நடந்தால் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வளசரவாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் இருமர்க்கத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இணை ஆணையர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருக்கிறார். இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர், காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில்  சீமானிடம் விசாரணை நடத்தப்படும்.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூரு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் மீண்டும் 8 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: சீமான் தம்பிகளால் ஸ்தம்பித்த வளசரவாக்கம்... காவல்நிலையம் முன்பு மாபெரும் போராட்டம்...!

 புதிய ஆதாரங்களையும் அவரிடம் இருந்து பெற்று இருக்கிறார்கள். நடிகை விஜயலட்சு சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் சீமான் தரப்பினர் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், வழக்கை வாபஸ் வாங்கும்போது பணம் கொடுத்ததாகவும் சொல்லி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

அதற்காக கூகுள் பிளே போன்ற ஆதாரங்களை விஜயலட்சுமியிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பாக சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மீண்டும் விஜயலட்சுமி கொடுத்த வாக்குமூலங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.  இந்த விசாரணைக்கு பிறகு சீமான் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட மாட்டார் என்றும், விசாரணையின் போது சீமான் அளிக்கக்கூடிய தகவல்களை பெற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலங்களை பதிவு செய்து அதனை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறையினர் சீமானை தற்போது கைது செய்யாமல் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து அதன் பிறகு நீதிமன்றம் கொடுக்கக்கூடிய உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்றும்கூறுகிறார்கள்.

சீமான் இந்த வழக்கில் ஒத்துழைக்க வேண்டும். அதற்காகவே அவருக்கு சம்மன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டதாகவும் விசாரணை ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் அவரை கைது செய்யாமல் விடுவிக்கப்படுவார். நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகு நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் பேரில் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை  இருக்கும் என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கைது பயத்தில் சீமான்... சென்னையில் கால் வைத்த மறுகணமே பதறியடித்துக் கொண்டு செய்த செயல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share