×
 

பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகர்! லாடம் கட்டிய போலீஸ்..!

புதுவையில் பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலாக நடைபெறும் மனித உரிமை மீறல்களில் ஒன்றாக உள்ளது. உளவியல் ரீதியாக பெண்களிடம் வன்முறை நிகழ்த்துவதும் அதிகரித்து உள்ளது. 

இந்த நிலையில், புதுச்சேரி, திருக்கனுார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மொபைல் எண்ணிற்கு, கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத புதிய எண்ணில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அந்த பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: சாம்பல் புதன்..! கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி..!

இந்நிலையில், பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் முத்தியால்பேட்டையை சேர்ந்த மதபோதகரான இம்மானுவேல் என்ற ராஜேஷ், என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் இம்மானுவேல் மொபைல் போனை பறிமுதல் ஆய்வு செய்தனர்.

அதில், இம்மானுவேல் மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து இம்மானுவேலை கைது செய்த போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மதபோதகர் என்ற போர்வையில் பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: புதுச்சேரி நண்பருக்கு ஸ்கெட்ச் போட்ட குரூப் கைது.. மனைவியிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசியது அம்பலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share