இந்தியா மற்றும் இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக நீண்டகாலமாக சர்ச்சை நீடிக்கிறது. 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, கட்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. இந்த முடிவால் தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடி உரிமைகளை இழந்ததாக கருதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி, இந்திய மீனவர்கள் கட்சித்தீவுக்கு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை இருந்த போதும் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. மறுபுறம் கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு துணை போனதாகவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: சுயநலனுக்காக மொழி பிரச்சனைய கிளப்புறாங்க.. ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் செய்த யோகி..!

மேலும் இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபையிலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவு மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இறுதியாக விசாரிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா காலமானார். இதனால் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேபோல கருணாநிதி மறைந்த நிலையில் அவருக்கு பதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு தம்மை மனுதாரராக சேர்க்க கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரர்களில் ஒருவராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வர், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு ... 'குடி' மகன்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!