ஆட்டோ கார்கள் மற்றும் வாடகை கார்களுக்காண QR குறியீடுகள் பல பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாகன விவரங்கள், தொடர்பு தகவல், மற்றும் பார்க்கிங் போன்ற தகவல்களை எளிதாகப் பெற முடியும்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், வாகனத்தின் தயாரிப்பு, மாடல், மற்றும் பிற விவரங்களை எளிதாகப் பெற முடியும். மேலும், QR குறியீட்டில் உரிமையாளர் அல்லது டிரைவர் பற்றிய தொடர்பு தகவல்களைச் சேமித்து, தேவைப்படும்போது எளிதாகப் பெறலாம்.
இதையும் படிங்க: தப்பிக்கூட இத பண்ணிடாதீங்க..! அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய ரூல்ஸ்..!

இதுமட்டுமல்லாமல், பார்க்கிங் அனுமதி, கட்டணம் செலுத்துதல், போன்ற தகவல்களை QR குறியீடு மூலம் பரிமாறிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.குறிப்பாக, திருட்டு போன்ற குற்றங்களை தடுக்கும் வகையிலும் QR குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன.
ஆட்டோ கார்களில் பாதுகாப்புக்கான QR குறியீடுகள், பாரத் NCAP திட்டத்தின் கீழ், காரின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களை எளிதில் அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் காரின் பாதுகாப்பு தரவு மற்றும் மதிப்பீடுகளைப் பெறலாம். பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் QR code வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூ ஆர் குறியீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், பயனாளிகளுக்கு QR குறியீடுகளையும் வழங்கினார். பின்னர், ஆட்டோவில் ஏறி சோதனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: நாங்க பிடிவாதமா இல்ல, தெளிவா இருக்கோம்! பாஜகவை ரோஸ்ட் செய்த முதல்வர்.