கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கி உள்ளது.கோ வையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் என்ற அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின் போது முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

இதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் ஒண்டிப்புதூர் சிறைச்சாலையின் திறந்தவெளி நிலம் இறுதியாக தேர்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தூக்கி வீசப்பட்ட அமித்ஷா படங்கள்..! ரணகளம் செய்த கோவை பாஜகவினர்
20.72 ஏக்கர் பரப்பளவில் ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் அமைக்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்றை வழங்கி உள்ளது.

உணவகம், ஸ்போர்ட்ஸ் பார், வீரர்களுக்கான ஓய்வு அறை, பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவைகளுடன் இந்த கிரிக்கெட் மைதானம் பிரமாண்டமான முறையில் அமைய உள்ளது.
இதையும் படிங்க: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..! போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை மாநகரம்.!