வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விலையை ரூ.41 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1.762 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், வீடுகளுக்குப் பயன்படும், சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கிறது. மும்பையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1714.50ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1872 ஆகவும், சென்னையில் ரூ.1924 ஆகவும் விற்கப்படும்.

கடந்த பிப்ரவரி மாதமும் இதேபோன்று வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது, ஆனால் அப்போது ரூ.7 மட்டுமே குறைந்தது. ஆனால் 2024 டிசம்பரில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.62 உயர்ந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு கிலோ தக்காளி ரூ.3... சாலையில் கொட்டப்படும் அவலம்...!
வர்த்தக சிலிண்டரை நம்பி தொழிலில் ஈடுபட்டுள்ள ஹோட்டல் தொழில்கள், சிறு கடைகள்,பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றுக்கு இந்த விலைக் குறைப்பு மிகப்பெரிய ஆறுதலைத் தரும். இதன் மூலம் ரெஸ்டாரண்ட், ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் விலையும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தில் சமீபகாலமாக சிலிண்டர் வழங்குவது அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலில் “ 2025, மார்ச்1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 10.33 கோடி உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. காலியான சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ளும் திட்டமும் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்க்ிறது. 2024-25 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் ரூ.39.38 கோடிக்கு 41.95 கோடி சிலிண்டர்கள் ரீபில் செய்து தரப்பட்டுள்ளன.
உஜ்வாலா திட்டத்தில் சமையல் சிலிண்டர் பெற்ற பெண்களின் வருவாய், தனிநபர் வருவாய் அதிகரித்ததால், ஆண்டுக்கு 4.5 சிலிண்டர்களை வாங்குகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம்.. குஜராத்தில் 8,9 தேதிகளில் நடக்கிறது..!