நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவித், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

காங்கிரஸ் எம்.பி. தனியாகவும், மக்களவை எம்பி. ஓவைசி தனியாகவும் உச்ச நீதிமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். ஓவைசிக்கு ஆதரவாக அவரின் வழக்கறிஞர் நிசாம் பாட்ஷா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!
அசாசுதீன் ஓவைசி தனது மனுவில் “ மக்களின் விருப்பங்களை நாடாளுமன்றம் பிரதிபலிகக்ககிறது, ஆனால் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை அரசியலில் இருந்து, சிறுபான்மையினரைப் பாதுக்காக உச்ச நீதிமன்றம் அரசியலப்புக் கடமையை காவலாளிபோல் செய்ய வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ஜாவித் தாக்கல் செய்த மனுவில் “வக்ஃபு சொத்துக்கள் மற்றும் அவற்றின் சுயாட்சி மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதித்து, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியைக் குறைத்து மதிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல் சொத்துக்கள் வைத்துக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டம் 300ஏ உரிமையை மீறுகிறது.
வக்ஃபு சொத்துக்கள் மீது மத்திய அரசு தனது கட்டுப்பாட்டை விரிவாக்குதன் மூலம், மத நம்பிக்கை அடிப்படையில் தனிநபர்கள் தங்கள் சொத்துக்களை தானமாக அளிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. வக்ஃபு சொத்துக்களை அதிக ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், சொத்துக்களின் கட்டுப்பாட்டை மதச்சார்பற்ற அதிகாரிகளுக்கு மாற்றுவது மத மற்றும் சொத்துரிமைகளை மீறுவதாகும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்தச் சட்டம் செயல்படுகிறது. வக்ஃபு சட்டத்தின் விதிகள் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன என்று தெரிவித்திருந்தார்.

உதாரணமாக, இந்து மற்றும் சீக்கிய மத அறக்கட்டளைகள் தொடர்ந்து ஓரளவு சுய-கட்டுப்பாட்டை அனுபவித்து வருகின்றன. ஆனால், முஸ்லிம் மதத்துக்குரிய வக்ஃபு சட்டம், 1995ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வக்ஃபு விவகாரங்களில் அரசின் தலையீட்டை அதிகரிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மத்ததுக்கு சமீபத்தில் மாறியவர்கள் தங்கள் சொத்துக்களை மத நோக்கங்களுக்காக வழங்குவதாக இருந்தாலும்கூட, இந்தக் கட்டுப்பாடுகள் அதற்கு அனுமதிக்காமல் பாகுபாடு காட்டுகின்றன.

வக்ஃபு வாரியக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக வக்ஃபு நிர்வாகத்தில் நியமிப்பது முஸ்லிம்களுக்கு எதிரானது. இந்து மதத்தோடு தொடர்புடைய வாரியங்கள், நிர்வாகத்தில் அவர்கள் மட்டுமே நிர்வகித்து சுயாட்சி செய்யும் நிலையில் முஸ்லிம்கள் நடத்தும் வக்ஃபு வாரியத்தில் மட்டும் பிற மதத்தனரும் உறுப்பினர்களாக இருப்பது எவ்வாறு நியாயம்” என்று மனுவில் தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா.. ஆதரவு - 128, எதிர்ப்பு - 95..!