காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
கோகோயின் மனைவி எலிசபெத் கோல்போர்னுக்கு ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா குற்றம் சாட்டினார். எலிசபெத் கோல்போர்ன் இஸ்லாமாபாத்தில் உள்ள காலநிலை- அறிவு மேம்பாட்டு பிரிவில் அலி தௌகீர் ஷேக்கின் கீழ் பணியாற்றினார். அலி தௌகீர் ஷேக் பாகிஸ்தான் திட்டக் குழுவின் முன்னாள் ஆலோசகர் ஆவார். கோல்போர்ன் இன்னும் பிரிட்டிஷ் குடியுரிமையை வைத்துள்ளார்'' என பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், காங்கிரஸ் எம்.பி., கோகோயின் பெயரைக் குறிப்பிடாமல் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு கௌரவ் கோகோய் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா இதுகுறித்து தனது எக்ஸ்தளப் பதிவில், ''இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோய், அவரது மனைவிக்கு பாகிஸ்தான் - ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பது குறித்த மிகவும் தீவிரமான, தொந்தரவான உண்மைகள் வெளிவந்துள்ளன. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன், பாகிஸ்தான் திட்டக் கமிஷனில் ஆலோசகராக இருக்கும் தௌகீர் ஷேக்குடன் உறவு வைத்திருக்கிறார் என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி..? வைகோ சொன்ன பளிச் பதில்..!
இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரமான பிரச்சினை. எனவே கௌரவ் கோகோய் வெளியே வந்து எலிசபெத்தின் ஐஎஸ்ஐ- பாகிஸ்தானுடனான தொடர்புகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.
எலிசபெத் கோல்பர்ன் ஏன் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ முகவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்? காங்கிரஸ் போராட்டம் இந்திய அரசுடன் தான் என்று ராகுல் காந்தி கூறியதை நிறைவேற்ற அவர்கள் செயல்படுகிறார்களா? காங்கிரஸ் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற ஐ.எஸ்.ஐ- பாகிஸ்தானை ஆதரிக்கத் தொடங்குமா?

தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான தகவல்களைப் பெறக்கூடிய நிலையில், கௌரவ் கோகோய் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைத் தொடர்ந்து வகித்தால், அது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்காதா? இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பாகிஸ்தானுக்கும் ஐஎஸ்ஐக்கும் சிறந்த நண்பராக மாறுவது ஏன்?'' என கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
அதே நேரத்தில், கௌரவ் கோகோய் ஒரு படத்தைக் குறிப்பிட்டு இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். ''டைகர் ஜிந்தா ஹை' படத்தில் வந்தது போல சல்மான் கானின் மனைவி ஒரு ஐஎஸ்ஐ முகவராக இருக்க முடியும் என்றால், நானும் நிச்சயமாக ஒரு ரா முகவர்தான். இது நகைப்புக்குரியது. பாஜகவுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரின் நிலத்தை அபகரிக்கும் வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. அவதூறு வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்யப்படுகின்றன. இவை எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகள். இது அவர்களின் பலவீனத்தையும், அவர்கள் விரைவாக தளத்தை இழந்து வருவதையும் காட்டுகிறது'' என அவர் தெரித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது... திமுக கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!