இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வந்திருந்த அவர் தமிழக பாஜக தலைவர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களும் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து புதிய மாநில பாஜக தலைவர் அறிவிப்பையும் அதிமுகவுடன் ஆன கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கையாளும் அதிக பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அமித் ஷா வருகையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி..! காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!

இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே மதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டிப்பா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கருப்பு நிற புறாக்களை பறக்க விட்டும் கருப்பு பலூன்களை பறக்க வேண்டும் அமித்ஷா புகைப்படத்தை வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 192 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு.. அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்..!