மாநாட்டின் நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். முதல்நாள் அமர்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசால், பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வந்துள்ளதாக உதயநிதி குற்றஞ்சாட்டினார். ஜனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை அரசியல் சட்டத்தின் முக்கிய விழுமியங்கள். இவற்றை பாஜக அரசு தகர்த்து வருவதாக அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் மீது திடீரென பாஜகவுக்கு அக்கறை: காங்கிரஸிடம் புதிய கோரிக்கை..

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்க பொது சிவில் சட்டம், ஒரேநாடு ஒரே தேர்தல் போன்றவற்றை கொண்டு வர முயற்சி மத்திய அரசு முயற்சிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியல் சாசனத்தை இந்தியா கூட்டணி உயர்த்திப் பிடிப்பதாகவும் மாறாக அதனை பாஜக உதற துடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

திமுகவின் இந்த சட்டத்துறை மாநில மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, இந்து ஆங்கில நாளிதழின் என்.ராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளில் திமுக முன்னெடுத்த சட்டப் போராட்டங்கள் என்னென்ன? எவற்றில் முக்கிய தீர்ப்புகளை பெற்றுள்ளது போன்ற விவரங்கள் மாநாட்டில் விவரணை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் இனி ‘ஜாலி’தான்! உற்சாக அறிவிப்பு வெளியிட்ட மோடி அரசு...