ஆந்திரா பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் பன்யம். அங்கு உள்ள கடைகள், மார்க்கெட்டுகளில் யாசகம் வாங்குவதை சில திருநங்கைகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கு கலெக்ஷன் போதிய அளவில் கிடைக்காததால், நந்தியால் நகர பகுதிக்கு அவர்கள் வந்துள்ளனர்.
அங்குள்ள கடைகள், மார்கெட் பகுதிகளில் பணம் வசூல் செய்துள்ளனர். மற்ற பகுதிகளில் இருந்து, பிற திருநங்கைகள் தங்களது பகுதிக்குள் பணம் வசூலில் ஈடுபட்டால், தங்களது கலெக்சன் பாதிக்கப்படும் என நந்தியால் பகுதியில் வசூலில் ஈடுபடும் திருநங்கைகள் கோபம் அடைந்தனர்.

இதனால் நந்தியால் மற்றும் பன்யம் பகுதி திருநங்கைகள் இருபிரிவினராக பிரிந்து மோதிக்கொண்டனர். கற்கள், மிளகாய் பொடிகளை தூவி சண்டையிட்டனர். இதனால் அந்த இடம் முழுவதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
பலர் நின்று வேடிக்கை பார்த்ததால், அப்பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கைகளை தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது திருநங்கைகள் போலீசாரிடம் வாக்குவாததிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பரீட்சைக்கு நேரமாச்சு.. பேருந்துக்காக காத்திருந்த +2 மாணவி.. நிறுத்தாமல் போன டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்..!

சமீபகாலமாக ஆந்திராவில் திருநங்கைகள் தனி அமைப்பாக போல செயல்பட துவங்கி வருகின்றனர். மாவட்டம் தோறும் தங்களுக்கு என ஒரு தலைவியை உருவாக்கி கொண்டு, மற்ற இடத்து திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கடந்தாண்டு இதேபோல் நடந்த ஒரு தகராறில் திருநங்கைகள் தலைவி வெட்டிபடுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஹாசினி. இவர் பிரபல திருநங்கை சமூகத்தின் தலைவியாக இருந்து வந்தார். இந்த நிலையில், கொடவலூர் மண்டலம் தபதோப்பு என்ற இடத்தில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், திருநங்கை ஹாசினி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால், அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கை தலைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நெல்லூர், தமிழ்நாடு, திருப்பதி, விஜயவாடா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட ஏராளமான திருநங்கை மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த கொலைக்கு திருநங்கைகளுக்கு இடையே நிலவும் அதிகார மோதல் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் ஆண்டு விழா.. மேடை ஏறிய சரித்திர பதிவேடு குற்றவாளி.. மாணவர்கள் மத்தியில் கஞ்சா பூ பாடல் கேடா?