திடீரென மேலே விழுந்த லாரி.. உடல்நசுங்கி இறந்த குழந்தைகள்.. தப்பி ஓடிய டிரைவரை தூக்கிய போலீஸ்..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி, வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சரிந்ததில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிர் இழந்த வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். வயது 30. இவர் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வரவூரிலிருந்து மிளகாய் தூள் அரைப்பதற்காக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தனது ஆறு வயது மகன் நிரோஷன் மற்றும் மூன்று வயது மகள் சியாஷினி ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள கோவில் திருமாளம் என்கிற இடத்திற்கு சென்றார்.
இதனையடுத்து மிளகாய் தூள் அரைத்து விட்டு அவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவில் திருமாளத்தில் இருந்து வரவூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அகர திருமாளம் என்கிற இடத்தில் கரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு கொண்டு எதிரே அதிவேகமாக வந்த லாரி வளைவில் திரும்பி உள்ளது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லார், மோகனின் இருசக்கர வாகனத்தில் மீது சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூவரும் லாரிக்கடியில் சிக்கினர். லாரி ஜல்லிக் கற்களுடன் அதிக்ல எடையில் இருந்ததால் மூன்று பேராலும் லாரியை விட்டு வெளியேறி வர முடியாமல் உடல் நசுக்கி உயிர் இழந்தனர்.அவர்களின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூவரையும் மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் மீட்க முடியவில்லை. உடனே இதுகுறித்து அங்கிருந்த மக்கள் பேரளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் உள்ள ஜல்லிக்கற்களை ஜேசிபி மூலம் அகற்றினர்.
இதையும் படிங்க: 2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!
லாரியை தூக்கி நிறுத்திய பிறகு லாரிக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கினர். இந்த நிலையில் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தற்பொழுது லாரி ஓட்டுநர் பேரளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவடிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், மயிலாடுதுறை சேர்ந்த விக்னேஷ் என்பதும் பேரளம் காரைக்கால் ரயில் பாதை அமைக்கும் பணிக்காக கரூரிலிருந்து ஜல்லி ஏற்றி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விக்னேஷ் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரே விபத்தில் தனது இரண்டு குழந்தைகளையும், கணவனையும் பரிகொடுத்த அந்த தாயின் அழுகுரல் அங்கிருப்பவர்களை உலுக்கியது. குழந்தைகளுடன் உடல் நசுங்கி உயிரிழந்த தந்தையின் முடிவு அப்பகுதி மக்களை சோகமாக்கியது.
இதையும் படிங்க: திருவாரூரில் பரபரப்பு.. ரவுடிகள் களையெடுப்பு.. 50 வீடுகளில் போலீஸ் சோதனை.. 5 பேர் அதிரடி கைது..!