×
 

மூட்டைகளில் மான்கறி ..நாட்டுத் துப்பாக்கியில் நடந்த வேட்டை ..சிக்கிய 3 பேர் ..!

நாட்டுத் துப்பாக்கி வைத்து மான் வேட்டையாடிய 3 பேரை கைது செய்த போலீசார் மான் இறைச்சியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்..

மான்களை வேட்டை ஆடுவது பாதுகாக்கப்பட்ட மிருகங்களாக 1972ல் இயற்றப்பட்ட வவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து காப்புக்காட்டில் உள்ள மான்களை சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் வேட்டையாடி வருவதாக விழுப்புரம் சரக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குற்ற நுண்ணறிவு தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் புதன்கிழமை அதிகாலை சேந்தநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

கள்ளக்குறிச்சி காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்ற பொழுது நாட்டுத் துப்பாக்கியுடன் மான் இறைச்சியை இரண்டு மூட்டைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் 5 பேர் வந்து கொண்டிருந்தனர் அவர்கள் போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற பொழுது போலீசார் அவர்களை விரட்டிச் சென்று 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவா, ராஜ்குமார், ஐயப்பன் என்பது தெரியவந்தது இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் நாட்டு துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் மற்றும் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த முட்டகண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share