டூர் போனா ஜாலியா இருக்கும்.. கள்ளக்காதலனுடன் ரகசிய திட்டம்.. கொடைக்கானல் லாட்ஜில் சிக்கிய பெண்கள்..!
கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் பெண்ணிடம் திட்டமிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த இரண்டு பெண்கள், கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எம். எம்.தெரு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கிய திண்டுக்கல் சீலப்பாடி பகுதியை சேர்ந்த அனிதா (வயது 28) தேனி மாவட்டம் ஜி. கல்லுப்பட்டி பகுதியில் வசிக்கும் நந்தினி (வயது 24) மற்றும் லாவண்யா (வயது 22) மூன்று பெண்களும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் தங்களுடைய நகைகளை மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றதாக புகார் அளித்தனர்.
இந்த நிலையில் எம் .எம்.தெருவில் பெண்கள் தங்கி இருந்த தங்கும் விடுதியின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து புகார் அளித்த நந்தினி மற்றும் லாவண்யா முன்னுக்கு பின் முரணாக காவல்துறையினரிடம் பதில் அளித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணையின் போது திண்டுக்கல் சீலப்பட்டியில் வசிக்கும் அனிதா, அடிக்கடி தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் வசிக்கும் தன்னுடைய தம்பி கோகுல் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த நந்தினி மற்றும் லாவண்யாவுடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிதா தனது தம்பி கோகுல் வீட்டிற்கு சென்ற நிலையில் அக்கா தம்பி இருவருக்கும் இடையே சிறு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அனிதா தனது தம்பியின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த நந்தினி மற்றும் லாவண்யா அனிதாவை சமாதானம் செய்து நட்பு ஏற்படுத்தினர். மேலும் அவரை சமாதானம் செய்து ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலில் விதிக்கப்பட்ட வாகன கட்டுப்பாடு.. எல்லோரையும் பாதிக்கும் உத்தரவு தேவையா..?
மேலும் அனிதா அதிக நகை அணிந்திருந்ததை பார்த்துக் கொண்டிருந்த நந்தினிக்கு அவரது நகையை கொள்ளை அடிக்க திட்டம் திட்டி உள்ளார். இதற்கு தனது தோழி லாவண்யாவையும் கூட்டு சேர்த்துள்ளார் , அதனைத் தொடர்ந்து அனிதா திண்டுக்கல்லுக்கு சென்ற நிலையில் நந்தினி அனிதாவிடம் நாங்கள் கொடைக்கானலுக்கு செல்கிறோம். நீயும் வந்தால் சுற்றுலாவை அனுபவிக்கலாம் என்று வற்புறுத்தி இருவரும் அழைத்துள்ளனர்.
இதுகுறித்து அனிதா தன் கணவன் பகவதி ராஜிடம் சொல்லி உள்ளார். அப்பொழுது கணவன் சரி போய் வா என்று கூறியுள்ளார். அனுமதி பெற்ற நிலையில் அனிதா தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு நந்தினி மற்றும் லாவண்யாவுடன் கொடைக்கானலில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து லாவண்யா தன் கள்ளக்காதலன் சாந்தகுமார் (வயது 22) என்பவருக்கு ரகசியமாக தாங்கள் தங்கியிருந்த விடுதியின் லொகேஷன் மற்றும் அறை எண்ணை அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திடீரென்று அனிதா, நந்தினி, லாவண்யா தங்கி இருந்த அறைக்குள் சாந்தகுமார் கத்தியுடன் நுழைந்துள்ளார்.
சாந்தகுமார் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த நந்தினி மற்றும் லாவன்யா அனிதாவுடன் சேர்ந்து பயந்தது போல் நடித்துள்ளனர். சாந்தகுமார் கத்தியை காட்டி நந்தினி மற்றும் லாவண்யாவின் கவரிங் போலி நகைகளை கழட்டுமாறு கூறியுள்ளான் நந்தினி மற்றும் லாவண்யா அனிதாவிடம் நீயும் உன் நகைகளை கழட்டி கொடு இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளனர்.
உயிர் பயத்தில் அனிதா தன் அணிந்திருந்த பத்து பவுன் தங்க நகையை கழற்றி கொடுத்துள்ளார். சாந்தகுமார் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சாந்தகுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் சாந்தகுமார் மறைத்து வைத்திருந்த வைத்திருந்த 10 பவுன் தங்க நகையை கொடைக்கானல் போலீசார் கைப்பற்றினர். மேலும் சாந்தகுமார் நந்தினி மற்றும் லாவண்யா மூவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர் இதனால் கொடைக்கானல் எம்.எம். தெரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "பிளேஸ் ஸ்டார்" வானில் நிலவும் அதிசியம்.. 80 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும்..!